பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை: 2.71 கோடி ரூபாய் வசூல்
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை இரண்டு நாட்கள் எண்ணியதில் மொத்த காணிக்கை வரவு ரூபாய் 2.70 கோடியை தாண்டியது.
பழனி மலைக்கோயில் உண்டியல்கள் 26 நாட்களில் நிறைந்ததால் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாட்களில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூபாய் 2.70 கோடியை தாண்டியது.
மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது - ஜே.பி.நட்டா
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தொடர்விடுமுறை மற்றும் ஓணம் திருவிழாவை முன்னிட்டு வந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 26 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல்கள் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
விமான நிலையம் எதிர்ப்பு குரல்... பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் போராடும் கிராம மக்கள்..!
முதல் நாள் புதன்கிழமை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 700 வருவாயாக கிடைத்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2042 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கப் பொருட்கள் 883 கிராம், வெள்ளி 13,997 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை என இரண்டு நாட்களில் மொத்த தொகையாக ரொக்கம் இரண்டு கோடியே 71 இலட்சத்து 48 ஆயிரத்து 290 ரூபாய் கிடைத்துள்ளது.
TN Cabinet meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செப்.26-இல் தமிழக அமைச்சரவை கூட்டம்..
பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.தங்கம் 1,085 கிராமும், வெள்ளி 15,441 கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 2,406 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணிக்கையின் போது அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், மதுரை உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) பொன்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்