மேலும் அறிய

Palamedu Jallikattu: “முன்னாடி ஒன்னு பேசுறீங்க.. ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதும் ஒன்னு பேசுறீங்க” - கொதித்து எழுந்த அமைச்சர் மூர்த்தி

பாலமேடு ஜல்லிக்கட்டில் மக்கள் முறையாக விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று பரபரப்பாக நிறைவு பெற்று, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் பரிசாக கார் , பைக் உள்ளிட்டவை எல்லாம் வழங்கப்பட்டன. தை மாதம் விழாக்கோலம் காணும் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், இன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

பரந்து விரிந்த களத்தில், பாய்ந்து வரும் காளைகளை பாலமேட்டில் பார்ப்பதே ரம்யமாக இருக்கும் என்பார்கள். மாடுபிடி வீரர்களுக்கு சவாலாக அமையும் களமாக திகழும் பாலமேட்டில் இன்று காளைகள் பாய்ச்சல் பயங்கரமாகும் இருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக, கட்டுப்பாடுகளின் கீழ் காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்குவார்கள். முதல்நாள் அவனியாபுரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே விதிமுறைகள் தான், பாலமேட்டிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

Palamedu Jallikattu: “முன்னாடி ஒன்னு பேசுறீங்க.. ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதும் ஒன்னு பேசுறீங்க” - கொதித்து எழுந்த அமைச்சர் மூர்த்தி

இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டின் போது பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் சரியாக விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தனர். அந்த சமயத்தில் அங்கு இருந்த அமைச்சர் பி.மூர்த்தி மக்களை அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அங்கு நடந்த ஜல்லிக்கட்டில் உள்ளூர்காரர் ஒருவர் மாட்டை பிடித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் “ஜல்லிக்கட்டு முறையாக நடைபெற வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் ஒழுங்கான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பாக ஒன்று பேசிவிட்டு தற்போது ஜல்லிக்கட்டு நடக்கும் போது அதை பின்பற்றவில்லை என்றால் எப்படி ஜல்லிக்கட்டை நடத்துவது. இந்த ஜல்லிக்கட்டு நடக்கனுமா வேண்டாமா” என்று மிகவும் கோபத்துடன் பேசினார். அவரின் பேச்சிற்கு பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 

பாலமேடு ஜல்லிக்கட்டில் தற்போது வரை மூன்று சுற்றுகள் நடைபெற்றுள்ளன. முதல் சுற்று முடிவில் (1st Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து  81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.  இரண்டாம் சுற்று முடிவில் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து  இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.மூன்றாம் சுற்று முடிவில் (3rd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து  இதுவரை மொத்தம்  221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அடுத்து சுற்று போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையை https://www.youtube.com/watch?v=a7ScIfCfBlo காணலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget