மேலும் அறிய

Palamedu Jallikattu : பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு பிடி வீரர்கள் யார் தெரியுமா..?

பாலமேடு ஜல்லிக்கட்டில் சின்னப்பட்டி தமிழரசன் 23 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார்.

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 860 காளைகள் களமிறங்கின. 

பாலமேடு ஜல்லிக்கட்டில் சின்னப்பட்டி தமிழரசன் 23 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். அவரை தொடர்ந்து, பாலமேடு மணி 19 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், ராஜா 15 காளைகளை அடக்கி மூன்றாவது இடமும் பிடித்தனர். 

சிறப்பு காளை:

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கி மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்த நெல்லை பொன்னர் சுவாமி கோயில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதல் பரிசு: 

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில்  23 காளைகளை பிடித்த தமிழரசன் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கின. தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஸ் சேகர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 877 காளைகள் அவிழ்க்க்கப்பட்டன. 345 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். 31 பேர் காயமடைந்த நிலையில், பாலமேடு சேர்ந்த அரவிந்த் ராஜ் மார்பு பகுதியில் காளை குத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மதுரை மாவட்டம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் 23 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள நிஸான் காரை பரிசாக வென்றார். பாலமேட்டைச் சேர்ந்த மணி 19 காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் ரங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை முதல் பரிசை பெற்றது. இந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் மானூத்தைச் சேர்ந்த மணி என்பவரின் காளை இரண்டாவது பரிசை வென்றது. ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன் குமார் சார்பாக இரண்டாவது சிறந்த காளைக்கு பசுவும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டன. அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

நாளை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
Vijayalakshmi on Seeman: வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Man American Woman Marriage : காஞ்சி பட்டில் அமெரிக்க பெண்கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞர்..களைகட்டிய கல்யாணம்VCK vs Police : போராட்டம் செய்த விசிக..குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ் கடும் தள்ளுமுள்ளுADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
Vijayalakshmi on Seeman: வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
அய்யய்யோ! தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?
அய்யய்யோ! தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?
CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?
CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?
சீமானுக்கு செருப்படி! சைதாப்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம் - என்ன நடந்தது?
சீமானுக்கு செருப்படி! சைதாப்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம் - என்ன நடந்தது?
Embed widget