மேலும் அறிய

ஓபிஎஸ்-ன் பகீர் குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு! திமுக-விற்கு ஆதரவா? பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திய அம்மா லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - ஓபிஎஸ்

நான் ஆதரவு கொடுத்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தார். அந்த நன்றி கூட இல்லாமல் என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பாற்றியது தான் அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு.


ஓபிஎஸ்-ன் பகீர் குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு! திமுக-விற்கு ஆதரவா? பரபரப்பு பேச்சு!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை - மயிலை  ஒன்றியம் பகுதியில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது . இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய பெருமை இந்த ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு உள்ளது. 9 அமைச்சர்களை ஜெயலலிதா பொறுப்பிலிருந்து நீக்கிய போது நான் அவரிடம் பேசி அதை தடுத்து நிறுத்தினேன். ஆனால் அவர்களே ஒன்று சேர்ந்து என்னை கட்சியிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டபோது நான் மிகவும் மனம் வருத்தப்பட்டேன் . நான் ஆதரவு தெரிவித்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள் பதவியில் இருக்க முடிந்தது. அந்த நன்றி கூட இல்லாமல் என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற செயலில் ஈடுபட்டார் அதை தான் நான் எதிர்த்தேன்,

எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அவரே (எடப்பாடி பழனிசாமி) முதலமைச்சராக இருக்கட்டும் என்று கூறினேன். ஆனால், வேலுமணி மற்றும் தங்கமணி கட்சி ஒருங்கிணைப்பாளராக நீங்கள் இருக்க வேண்டும் என கூறினார்கள் பின்னர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பாற்றியது, கட்சியில் அவருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை ஒப்புக்கொண்டது தான் அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு, மக்களுக்கு என்ன தேவையோ, நாட்டு வளர்ச்சிக்கு என்ன தேவையோ என்பதை அறிந்து தனது உடல் நலத்தை கூட பார்க்காமல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பணியாற்றிய விதம் இந்தியாவிலேயே தமிழகத்தை பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கின்றது .


ஓபிஎஸ்-ன் பகீர் குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு! திமுக-விற்கு ஆதரவா? பரபரப்பு பேச்சு!

2019 ஆம் ஆண்டிலேயே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறுத்தப்பட்ட அம்மா லேப்டாப், தாலிக்கு தங்கம் ஆகிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்பை வழங்கி செயல்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின் , தென் தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்த போது, மு.க.ஸ்டாலின் தான் மீண்டும்  முதலமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது, சட்ட ஒழுங்கு, சாதி பிரச்சனை என எந்த பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எல்லா தேவையும் பூர்த்தி செய்யக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின்,

தமிழக வளர்ச்சி பணிக்கு 40 சதவீதம் வரவேண்டி உள்ள நிலையில் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது.   எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமிழகம் தலை வணங்காது என தெரிவித்தார். டெல்லியில் உள்ளவர்கள் இங்கு (தமிழகத்தில்) வந்து பேசுகின்ற நிலைமையை மாற்றி டெல்லி சென்று அவர்களை சந்தித்து அடிமையாகி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சித்தார்.  தொடர்ந்து பேசிய அவர் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் வரவேண்டும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget