மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சிவகாசியில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு ; காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதி
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
![சிவகாசியில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு ; காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதி One person was killed in an explosion in Sivakasi and the injured were admitted to the hospital TNN சிவகாசியில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு ; காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/19/4e56cfbe6333eeb3aa4454a4233bb2ca1674114478520184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு செயல்பட்டு வருகிறது. 140 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
#Sivakasi | An explosion took place at a firecracker manufacturing factory in Sivakasi in Virudhunagar district: Meghanatha Reddy, District Collector, Virudhunagar
— arunchinna (@arunreporter92) January 19, 2023
Further reports to follow - @abpnadu #virudhunagar @ABPNews @LPRABHAKARANPR3 @manickamtagore @GoodSnake_offl . pic.twitter.com/RSEUXC82ms
இந்த வெடி விபத்தில் திருத்தங்கல்லை சேர்ந்த ரவி (வயது 58) என்ற பட்டாசு தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சாமுவேல் ஜெயராஜ் என்ற தொழிலாளி படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
![சிவகாசியில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு ; காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/19/9350f1fe32ca4c6307f1294c2ffe6cc31674114345588184_original.jpeg)
இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறை தரைமட்டமானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நடிகையால் சர்ச்சை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion