மேலும் அறிய
Advertisement
மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நடிகையால் சர்ச்சை !
சினிமா பிரபலங்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இரவு கிழக்கு கோபுர வாசல் அருகேயுள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ் விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோயில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்போன் எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெளியில் உள்ள செல்போன்களை பாதுகாப்பு அறையில் வைத்து செல்கின்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி தொடர்ச்சியாக கோயிலுக்குள் செய்தி எடுப்பதற்கு ஊடகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் சினிமா பிரபலங்களை சோதனை செய்யாமலே நேரடி வழியில் அனுப்புவதால் அவர்கள் கோயிலுக்குள் செல்போனை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளது.
இதனை நிருபிக்கும் வகையில் கடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இட்னானி கோயில் வளாகத்தில் சாமி தரிசனம் மற்றும் தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும் பக்தர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தும் நிலையில் சினிமா பிரபலங்களிடம் எந்த சோதனையும் செய்யாமல் கோயிலுக்குள் வளாகத்திற்குள் அனுப்புவதால் இது போன்ற சர்ச்சை ஏற்பட்டு வருகின்றது.
நடிகை சித்தி இட்னானி அவரது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்தின் கீழ் வரும் கமெண்டுகளில் கோயிலுக்கு எப்படி புகைப்படம் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அந்த புகைப்பட பதிவை நீக்கியுள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் தனது பேஸ்புக்கில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion