மேலும் அறிய
Advertisement
Madurai: நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் அதிகாரிகள் 2-வது முறையாக சோதனை
மதுரை உள்ளிட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் 2-வது முறையாக சோதனை செய்தனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போது கடந்த சில நாட்களுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து, சகாயராஜா ஆகிய 4 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனிடையே நியூ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் இழந்த நபர்கள் உரிய புகார் அளிக்கலாம் என சிறப்பு முகாம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் மூலமாக நேற்று முன் தினம் வரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட 100 புகார் மனுக்களில் 22 கோடி ரூபாய் வரை பணம் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றது. ஏற்கனவே பொதுமக்களின் புகார் தொடர்பாக கடந்த ஜூன்-24ல் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முதல் முறையாக காலவாசல் அருகே உள்ள நியோ மேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது முறையாக நியோ மேக்ஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸ்க்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் உள்ள நியோ மேக்ஸ் அலுவலகத்தில் காலை முதலே பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் சோதனை நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திற்கான ஆவணங்கள் உள்ளதா எனவும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மூலமாக பணப்பரிமாற்றம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக எழுந்த புகாரில் 4 இயக்குநர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion