மேலும் அறிய

Pamban Bridge: புதிய பாம்பன் பாலப் பணிகள் எப்போது முடியும்? ; பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - முழு தகவல் இதோ

புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் ரயில் போக்குவரத்து மற்றும் புதிய ரயில்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ரமேஸ்வரம் வழி பாம்பன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் தீவு மிகப்பெரிய சுற்றுலாத ஸ்தலமாகவும், ஆன்மீக அடையாளமாகவும் விளங்குகிறது. அங்கு அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வரலாற்று பாலம் பாம்பன்

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கிர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது. சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. பாலத்தின் அபாய நிலை காரணமாக ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. பராமரிப்பிற்காக ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர். எனவே நவீன வசதிகளுடன் ரூபாய் 550 கோடி செலவில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி. மீ. நீளத்திற்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. நடுவில் உள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும்.
 
செங்குத்துப் பாலம்

பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய இருக்கிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும். கடல் பகுதியை பாதுகாக்கும் வகையில் லக்னோ ரயில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையின் பேரில் பாலத்தின் கிர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. அங்கிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பட்ட கிர்டர்கள் மற்றும் லிப்டிங் ஸ்பேன் ஆகியவை பாலத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன. கடலில் 333 காங்கிரிட் அடித்தளங்கள், 101 காங்கிரிட் தூண்கள் ஆகியவை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டன. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது.
 
இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு

மண்டபம் பகுதியில் இருந்து கப்பலுக்காக திறக்கும் பகுதி வரை 76 கிர்டர்கள் பாலத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன. நடுவில் உள்ள திறக்கும் பகுதி பாம்பன் பகுதியில் இருந்து மெது மெதுவாக நகர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 228 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. பாம்பன் பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு திறக்கும் பகுதி நகர்த்தப்பட்டு விட்டதால் அந்தப் பகுதியில் கிர்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலத்தில் 1.5 கி.மீ. நீளத்திற்கு மின் மயமாக்கல் பணிகளும் நிறைவு பெற்று விட்டன. அதில் சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் நிறைவு பெற்றுவிட்டது.  மீதமுள்ள 0.6 கி.மீ.  ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் கிர்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்தவுடன் துவங்க இருக்கின்றன. செங்குத்தாக திறக்கும் லிப்டிங் பகுதியை இயக்க தேவையான மின் இயந்திரவியல் கருவிகள் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடைந்து புதிய பாம்பன் பாலம் இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
 
புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் ரயில் போக்குவரத்து மற்றும் புதிய ரயில்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ரயில்கள் உரிய வேகத்தில் குறித்த காலத்தில் சென்று வர முடியும்.  புதிய பாலத்தை பெரிய கப்பல்கள் எளிதாக கடந்து சென்று தொழில் பொருளாதர வளர்ச்சி மேம்பாடு அடைய வாய்ப்பாக அமையும். நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் இந்த புதிய பாலம் எந்தவித பழுதும் இல்லாமல் நீண்ட காலம் சேவையாற்ற வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய பாலத்தின் வாயிலாக வட்டார தொழில் பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. இது போன்ற பெரிய கட்டமைப்புகளை உருவாக்கும் இந்திய ரயில்வேயின் முயற்சி ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் ரயில் போக்குவரத்தின் மூலம் பல்வேறு பகுதிகளை இணைக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை. அருகில் உள்ள பாம்பன் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தும் பணி மற்றும் வளர்ச்சி பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இந்த புதிய பாம்பன் பாலத்தை ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடட் நிர்மாணித்து வருகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget