மேலும் அறிய
Advertisement
போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு உறுதி
இந்து சமய அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
மதுரை மாவட்டம் அழகர்கோயில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் கோயில் நிர்வாகிககள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு முன்னேற்பாடக கடந்த 9-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க ராக்காயி அம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அதனை தொடர்த்து முருகனின் 6-வது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2.5 கோடி மதிப்பீட்டில் மூன்று உபயதாரர்கள் மூலம் வெள்ளிக்கதவுகள் பொறுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,” திருக்கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 3884 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் பக்தர்களுக்கு வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழமையான கோயில்களில் 100 கோடி ரூபாய் ஒதுக்கி தி.மு.க., அரசு திருப்பணிகளை செய்து வருகின்றது. திருக்கோயிலுக்கு நிலுவையில் இருந்த ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மீண்டப பணிகள் எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்கப்படுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக செய்து முடிக்கப்படும். ஆலயங்களில் செல்போன் பயன்பாடு தடை குறித்து நீதிமன்ற உத்தரவை பொறுத்த வரையில், ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இதேபோல தமிழகத்திலுள்ள 48 முதுநிலை ஆலயங்களில் செயல்படுத்தப்பட்டு முதலில் திருச்செந்தூரில் அமல்படுத்தப்படும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அய்யர்மலை, சோழிங்கர் உள்ளிட்ட இடங்களில் மலைக்கோயில்களில் ரோப்கார் சேவையை ஏனோ தானோ என செய்தனர். தி.மு.க., பொறுப்பேற்று முறையாக நிதி ஒதுக்கப்பட்டு மலைக்கோயில்களில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றது. திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோயிலில் பணிகள் நடைபெற்று வருகிறது.
சில மலைக்கோயில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார். போலிச் சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்த கேள்விக்கு, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என கூறாமல் தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என கோயில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே ஒப்படைக்கப்படும். தி.மு.க., அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime : கோவையில் லாட்டரி விற்றவர் கைது..! 2140 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion