Jallikattu: 'முதல்வரால் ஜல்லிக்கட்டு எந்ததடையும் இல்லாமல் தொடரும்' - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
”மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது குடும்பத்துடன் பார்வையிட்டேன்”
2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை இல்லை, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது, தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஜல்லிக்கட்டு போட்டி இணைந்தது அல்ல என்ற கருத்தை ஏற்க முடியாது எனக்கூறி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை தமிழகத்தில் அரசியல் கட்சியினர் எந்த மாறுபாடின்றி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
I welcome the judgement of the five-judge Constitutional Bench of the Supreme Court upholding the validity of Tamil Nadu’s law allowing our ancient sport of #Jallikattu (Eruthazhuvuthal). Our Hon’ble CM @mkstalin's efforts have ensured that this historical and cultural practice… pic.twitter.com/6RGjVac7ZN
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 18, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்