மேலும் அறிய
Advertisement
நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை திட்டம் நாளை தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை முதல் துவங்க உள்ளோம் -மதுரையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.
மதுரை ஆவின் தொழிற்சாலையில் 8 மாவட்டங்களை சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதில் பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை ஆணையர் மரு. சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் த. மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "ஆவினில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாடு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது., கடந்த நான்கு மாதங்களாக எடுத்துள்ள முயற்சி நல்ல பலனை அடைந்துள்ளது. பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும்.
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை கோரிப்பாளையத்தில் தர்ஹா சந்தனக் கூடு விழா கோலாகலம்; மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்பு
தற்போது தீவிரமாக கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வசதிகள், பராமரிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்க உள்ளோம். உலக அளவில் பார்த்தோமானால் கால்நடை வளர்ச்சி மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. நாளைய தினம் இரண்டு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளோம். நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை திண்டுக்கல்லில் துவங்க உள்ளோம். ஆவினை பொருத்தவரை குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. எங்களுடைய லஞ்ச ஒழிப்புத் துறையினர் எங்கு தவறு நடக்கிறது, என்பதை கண்டுபிடித்து அதை எந்த சட்டத்தில் தண்டனை வழங்க வேண்டும் என அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் அதற்கான உற்பத்தியை தொடங்கி தாராளமாக வழங்கப்படும். ஆவினில் சென்ற மாதத்தில் எட்டு சதவீத விற்பனை உயர்ந்துள்ளது. படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனது வீடு திறந்தே தான் இருக்கும், பால் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தோம் என்னை தொடர்பு கொள்ளலாம் தீர்வு காணப்படும்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion