மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

மதுரை எம்.பியை ஒருமையில் பேசிய கே.என்.நேரு - மார்க்சிஸ்ட் கம்யூ கண்டனம்

தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை’’

சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை  ஆய்வு செய்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சிரித்துக்கொண்டே மதுரை எம்.பியை கேளுங்க என அவர் குறித்து ஒருமையில் பேசியது சர்ச்சையாக மாறிவருகிறது.
 
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது நிறைவு பெறும் என்ற செய்தியாளர் கேள்விக்கு ?
 
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் கட்டடப் பணிகள் 99 % நிறைவடைந்து விட்டது., விரைவில் பணிகள் முடிவுற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

மதுரை எம்.பியை ஒருமையில் பேசிய கே.என்.நேரு - மார்க்சிஸ்ட் கம்யூ கண்டனம்
 
தொடர்ந்து தொடர் மழை காரணமாக நகர் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா.? என்ற கேள்விக்கு
 
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை இருப்பதாலும்., சாலைகள் புதுபிக்கும் பணி நடைபெறவில்லை எனவும்., மதுரையில் மட்டும் 328 இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். 
 
மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவி நேரடி தேர்வா.? அல்லது மறைமுக தேர்வா.? என்ற செய்தியாளர் கேள்விக்கு.?
 
அது அரசாங்கம் முடிவு செய்து தேர்தல் அறிவித்த பின் தெரியவரும் என்றார்.

மதுரை எம்.பியை ஒருமையில் பேசிய கே.என்.நேரு - மார்க்சிஸ்ட் கம்யூ கண்டனம்
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமானநிலைய விரிவாக்கப்பணிகள் நிறைவடையாமல் உள்ளதே ?
 
சம்மந்தப்பட்ட ஆட்களிடம் கேட்காமல் என்னிடம் கேட்கின்றீர்கள், வெங்கடேசன் என்ற ஒரு ஆளு இருக்கான் அந்த ஆளிடம் கேளுங்க, எம்.பி இடம் கேளுங்கள்” என கூறி நகைத்தார்.

மதுரை எம்.பியை ஒருமையில் பேசிய கே.என்.நேரு - மார்க்சிஸ்ட் கம்யூ கண்டனம்
 
காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டது மற்றும் மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு ?
 
எங்கோ ஒரு மூலையில் நடைபெறுவதை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என பேசக்கூடாது. அதிமுக ஆட்சியில் நடக்கவில்லையா.? இது ஒரு விபத்து போன்றதுதான் அதற்காகத்தான் இரவில் ரோந்து செல்லும் காவல்துறையினர் கையில் துப்பாக்கியுடன் செல்ல வேண்டுமென காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார் என பேசிய அமைச்சர் தற்போது தமிழகத்தில் பெய்த மழையில் கூட ஒன்றிரண்டு பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
 
எல்லா இடங்களிலும் முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். எங்காவது ஒரு இடத்தில் நடைபெறுவதை வைத்து ஒட்டுமொத்தமாக எப்படி குற்றம் சொல்வது இதை அவரிடமே கேழுங்கள் எனக் கூறிவிட்டு சென்றார்.
 
இந்நிலையில் கே.என்.நேரு ஒருமையில் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள்  பிரதிநிதியை பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது எனவே தமிழக முதல்வர் பிரச்னையில் தலையிட வேண்டும். மேலும் இப்பேச்சு கண்டனத்துக்கூரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் அறிக்கை  ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Embed widget