மேலும் அறிய
Advertisement
மேல்மருவத்தூர் இருமுடி திருவிழா; தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி
விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை இருமுடித் திருவிழா நடைபெறுகிறது. எனவே பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636 / 12635), சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637 ), சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) ஆகியவை டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரையும், மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692) கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102), நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658) ஆகியவை நவம்பர் 30 முதல் ஜனவரி 24 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) டிசம்பர் 1 முதல் ஜனவரி 24 வரையும், செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) நவம்பர் 30 முதல் ஜனவரி 21 வரையும், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக செல்லும் மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் (22624) நவம்பர் 30 முதல் ஜனவரி 20 வரையும், மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651) டிசம்பர் 3 முதல் ஜனவரி 23 வரையும், ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மென்ட் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22613), பனாரஸ் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22536) டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - சென்னை எக்ஸ்பிரஸ் (12668), மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (22102), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20896) ஆகியவை டிசம்பர் 1 முதல் ஜனவரி 19 வரையும், தஞ்சாவூர் மெயின் லைன் வழி சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623) டிசம்பர் 1 முதல் ஜனவரி 21 வரையும், டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12652) நவம்பர் 30 முதல் ஜனவரி 23 வரையும், அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22614) நவம்பர் 29 முதல் ஜனவரி 17 வரையும், சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) டிசம்பர் 7 முதல் ஜனவரி 25 வரையும், மும்பை குர்லா - மதுரை எக்ஸ்பிரஸ் (22101) டிசம்பர் 6 முதல் ஜனவரி 24 வரையும், ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535) டிசம்பர் 6 முதல் ஜனவரி 18 வரையும், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20895) டிசம்பர் 1 முதல் ஜனவரி 20 வரையும், தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) டிசம்பர் 3 முதல் ஜனவரி 24 வரையும், தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20683) டிசம்பர் 3 முதல் ஜனவரி 25 வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்து - மீட்பு பணியில் தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், முடிவுகளும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion