Nenjukku Needhi: வெளியானது நெஞ்சுக்கு நீதி: மொத்த டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி!
உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் முன்பே அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி ரவிக்குமார்.
2012 ல் ராஜேஷ் இயக்கத்தில் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோ உதயநிதி உருவானார். ‛திமுக ஆட்சியில் தயாரிப்பாளராக இருந்தவர்கள், எங்கள் ஆட்சியில் நடிக்கவும் செய்கிறார்கள்’ என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு, அப்போது அது பார்க்கப்பட்டது.
@Udhaystalin - நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் முன்பே அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ., @TamilarasiRavi3 . டிக்கெட்கள் இலவசம் கைப்பேசி என்னுடன் அறிவிப்பு போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல்.#NenjukuNeedhi #DMK @mkstalin @TRBRajaa @SRajaJourno pic.twitter.com/I0YU6SN49q
— Arunchinna (@iamarunchinna) May 20, 2022
முதல்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற, உதயநிதி அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன் என , இடைவெளிக்கு இடைவெளி தனது படங்களை அவ்வப்போது இறக்கிக் கொண்டே இருந்தார் உதயநிதி. கடந்த 2020 ல் மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்த சைக்கோ நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின், நீண்ட இடைவெளிக்குப் பின் போனிகபூர் இயக்கத்தில், அருண்குமார் காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள பிரியா திரையரங்கில் இன்று நெஞ்சுக்கு நீதி படம் வெளியாக உள்ளது. இதையடுத்து தி.மு.கவை சேர்ந்த தற்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி ரவிக்குமார் இன்று மாலை 6.30 காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்து உள்ளார். இந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் இளைஞர்களுக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாகவும் மேலும் டிக்கெட் தேவைக்கு கைப்பேசி எண்ணுடன் போஸ்டர்கள் அடித்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Nenjukku Needhi : 50 அடி சாலையில் 50 அடி கட்டவுட்.. உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி.. மதுரையில் வைக்கப்பட்ட கட்-அவுட் https://t.co/Fs3kwDkd2f@Udhaystalin | @mkstalin | @BoneyKapoor | @TRBRajaa | @johnraja303 | @SRajaJourno | #dmk | #NenjukuNeedhi
— Arunchinna (@iamarunchinna) May 19, 2022