Karthigai Deepam 2023: 'தென் திருவண்ணாமலை'.. திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் இன்று மகாதீபம்..!
மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.
திருகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை-யை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் இன்று 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வரும் இந்த கார்த்திகை தீப திருநாளில் மக்கள் இன்று மாலை வேளையில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவார்கள். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மதுரை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு. மதுரை மல்லிகைப் பூ 1 கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்ட்டது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் திருகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை-யை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் மற்றும் தங்கமலைராமன் திருக்கோவில், தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த திருக்கோவிலின் மலை உச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றுவதற்கான தீபம் ஏற்றும் கொப்பரை - யை தயார் செய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். கொப்பரையை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைத்து மலர் மாலை சூட்டி தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் மலை உச்சிக்கு இந்த கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு 100 மீட்டர் துணி, 200 லிட்டர் நெய் மூலம் மகாதீபம் ஏற்றும் பீடத்தில் வைத்து தீபம் ஏற்ற தயார் செய்யப்பட்டது. இன்று சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு