பெளர்ணமி நிலவில் மதுரை வைகை நதியில் நடந்த கோலாகல திருவிழா.. குவிந்த பக்தர்கள்..
நதிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் வைகை மகா ஆரத்தி திருவிழா நடைபெற்றுது.
வருணபகவானைப் பிடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆரத்தி பெருவிழா நடத்தப்படுகிறது.
பெளர்ணமி நிலவில் வைகை நதிக்கு மஹா ஆரத்தி திருவிழா நடைபெற்றது. திரளான பெண்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு !
— arunchinna (@arunreporter92) December 27, 2023
மதுரை வைகை ஆற்றில் இயற்கை வளங்களில் ஒன்றான நதிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக வைகை மகா ஆரத்தி திருவிழா நடைபெற்று வருகிறது. pic.twitter.com/fH7R2JF4Da
வைகை மகா ஆரத்தி திருவிழா