மேலும் அறிய

Madurai: அரசுக் கல்லூரிகளில் நவீன நாடகம்... இலவசமாக கற்றுக் கொடுக்கும் மதுரை இளைஞர்

நாடகத்தில் அமெரிக்காவின் போர் வியாபார தந்திரத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி தன் நடிப்பால் அரங்கை அதிர வைத்தார். 

நவீன நாடகக் கலையை  கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் இலவசமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார் மனோஜ்.

பள்ளிப் பருவம் -  முதல் நாடகக் கலை

"கலைகள் அற்ற சமூகம் நீர்த்துப் போனதற்கு சமம்' என்கிற பண்பாட்டு பழமொழிக்கு உயிர் கொடுத்து வளர்த்தெடுக்ககும் முயற்சியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கருமாத்தூர் மனோஜ் களம் இறங்கி ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தன் பள்ளிப் பருவத்தில், படிக்கும்போதே நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, கின்னஸ் சாதனை படைத்த "திசைகள்" கலைக்குழுவில் இணைந்தார். சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடங்கி, பின்னாளில் ஒரு  கதாநாயகனாக பாத்திரமேற்று பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய ஆயிரம் கிராமங்களில் சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி உள்ளார். தொடரந்து கருப்புக் காதல், விசேஷம் இந்த 2 நாடகங்களும் தமிழ்நாட்டில் பல மேடைகளில் அரங்கேறியது. "ஹிரோஷிமா" என்ற மேடை நாடகத்தில் 2-ம் உலகப் போரில் போடப்பட்ட அணுகுண்டால் ஏற்பட்ட சேதத்தையும் உயிரிழப்பையும் தத்துவமாக காட்டி, அதன் பின்னாளில் இருந்த அமெரிக்காவின் போர் வியாபார தந்திரத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி தன் நடிப்பால் அரங்கை அதிர வைத்தார். 

இயக்குநர் பாரதி ராஜாவுடன் பயணம்

மதுரை தமிழ்ச்சங்க கல்லூரியில் இளங்கலை இலக்கியம் மற்றும் முதுகலை ஆய்வு நிறைஞர் ஆகிய பட்டங்களை படித்து முடித்ததார். கருமாத்தூர் திசைகள் கலைக்குழுவின் கதைக்கருவையும், சாதனைகளையும் கிராமப்புறங்களில் நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் அறிந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முறை நாடகத்தை நேரில் காண விரும்பினார் என்பது சிறப்பு. எழுத்திற்கு இணையாக மனோஜிடம் உள்ள நடிப்பாற்றலை கண்ட பாரதிராஜா பல்வேறு வாய்ப்புகளை அளித்தார்.

நவீன நாடக குழுவில் பயணம்

தொடந்து டெல்லியில் செயல்பட்டு வரும் தேசிய நாடகப் பள்ளி, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் நாடகங்களில் 2011ம் ஆண்டில் தமிழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாகமான மணல் மகுடி  குழுவின் முருக பூபதியின் நாடகம் தான். அந்த நாடகத்தில் தானும் ஒருவராக கலந்து கொண்டு நடித்ததை பெருமையாக  நினைவு கூறுகிறார். மனோஜ்க்கு பிறப்போடு தோன்றிய நாடகக்கலை விதை திசைகள் கலைக்குழுவில் விழுந்து முளைத்து துளிர்த்தது. பின் முருகபூபதியின்  மணல் மகுடி என்ற நாடககுழு  நாற்றங்ககாலில்  முதிர்ந்த நாற்றாகிவிட்டது. நல்ல மகசூழுக்கு நாற்றை தனியாக பிடுங்கி  வயலில் நடுவது போல மனோஜ் தற்போது தனியாக நவீன நாடகக் கலையை இயக்கி வருகிறார். நடிகனாக இருந்த மனோஜ் நவீன நாடகக்கலைஞர் இயக்குநராக முழுமையாக மாறிவிட்டார். முதல் முயற்சியாக தான் படித்த மதுரை செந்தமிழ் கல்லூரியில் ஒரு நாடகத்தை நடத்த திட்டமிட்டார். அந்த கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஒரு மாத காலம் இலவச பயிற்சி கொடுத்து அதன் "மனித குரங்கு" என்ற நாடகத்தை அந்த கல்லூரியில் அரங்கேற்றினார். அப்போது நாக் குழுவின் அதன் உறுப்பினர்கள் இதை கண்டு களித்து மிகவும் பாராட்டினர்.  நாடகத்தின் சிறப்பை அறிந்த மதுரை மீனாட்சி கல்லூரி, மாணவிகளைகதேர்வு செய்து தொடர்ந்து 15 நாட்கள் இலவசமாக நவீன நாடகப் பயிற்சி அளித்து,  ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.  இந்த நாடகம் வரும் டிசம்பர் மாதம் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

மேலும் கருமாத்தூர் மனோஜ் கூறுகையில், “நாடகம் என்பது ஒரு சில மணி நேரம் நடிகர்கள் மேடையில் தோன்றி நடித்துவிட்டு பார்வையாளர்களின் பாராட்டுகளையும் கைதட்டுகளையும் பெற்றவுடன் கடமை முடியக்கூடாது. மாறாக, நாடகத்தின் உட்கருத்து சமூக விழிப்புணர்வு செய்திகள் பார்வையாளர்களை நாடகத்தோடு பிணைக்க வேண்டும். மேடை நாடகங்கள் சமூகத்தில் வெறுமனே பொழுதுபோக்காக இருக்கக்கூடாது” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
Embed widget