மேலும் அறிய
பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
பூனைக்கடியால் பாதிக்கப்பட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பாலமுருகனின் உடல் அதிகளவு பாதுகாப்புடன் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை - கோப்புப்படம்
பூனைக்கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளைஞருக்கு ஏற்பட்ட பூனைகடி
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 25) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை விரட்டிய போது பூனை ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்ட நிலையில் அது பெரிய அளவிலான புண்ணாக மாறியுள்ளது. பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்தபோது திடீரென்று தப்பி ஓட முயன்றவரை பிடித்து இரவு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தனி அறையில் இருந்த நிலையில் கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக திடீரென அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நல குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனைக்கடித்ததில் பாதிக்கப்பட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பாலமுருகனின் உடல் பாதுகாப்புடன் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணம் வேண்டாம்
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.மாநில உதவி மையம் :104சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை,ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















