மேலும் அறிய
உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி.. 22 வருட ராணுவ சேவைக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு!
இராணுவ வீரர் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வருவதை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கிராமத்தின் ஆரம்பத்திலிருந்து இராணுவ வீரர் வீடு வரை மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனர்.

ராணுவ வீரருக்கு வரவேற்பு
Source : whats app
உசிலம்பட்டி அருகே 22 ஆண்டுகள் இந்திய இராணுவத்திற்காக பணியாற்றி ஓய்வு பெற்று வீடு திரும்பிய இராணுவ வீரருக்கு உறவினர்கள், கிராம மக்கள் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்திய இராணுவத்திற்கான தனது பணியை துவங்கியுள்ளார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடி அழகு., கடந்த 2003 ஆம் ஆண்டு நாசிக் பகுதியில் இந்திய இராணுவத்திற்கான தனது பணியை துவங்கியுள்ளார். தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம், இராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி நாயக் ஓ.பி.ஆர் பதவி வரை பதவி உயர்வும் பெற்று பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது தான் பணியை துவங்கிய நாசிக்- ல் உள்ள முகாமிற்கே மீண்டும் பணிக்கு வந்து பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று இன்று சொந்த ஊரான ஏ.இராமநாதபுரம் கிராமத்திற்கு வந்தடைந்தார்.
இராணுவ வீரர் வீடு வரை மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு
இராணுவ வீரர் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வருவதை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கிராமத்தின் ஆரம்பத்திலிருந்து இராணுவ வீரர் வீடு வரை மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர். நாட்டிற்காக பணியாற்றிவிட்டு வீட்டிற்கு வந்த இராணுவ வீரரை குடும்பத்தினரும் ஆராத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















