மேலும் அறிய

நீட் முறைகேடு: திருப்பரங்குன்றத்தில் மாணவர் ரயில் மறியல்; பரபரப்பு, பலர் கைது!

பத்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வெளியேற்றியதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு திருச்செந்தூர் ரயில் புறப்பட்டது.

டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பரங்குன்றத்தில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு - 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது.

நீட் தேர்வை விளக்க கோரி போராட்டம்
 
நீட் தேர்வு முறைகேடு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நீட் தேர்வை விளக்க கோரியும் டெல்லியில் சிஜேபினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் கடந்த 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்தும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட சில அமைப்புகள் சேர்ந்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ரயில் மறியல் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்
 
டெல்லியில் நடைபெறும் மாணவர், இளைஞர்கள் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் ஆதரவு இயக்கம் நடத்த வர்க்க வெகுஜன அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் காவல் நிலைய முன்பு தொடங்கிய போராட்டத்திற்காக தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ரயில் நிலையம் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதைகளில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் நிலையம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை தகர்த்துவிட்டு ரயில்வே தண்டவாளம் நோக்கி வந்தனர் அப்போது ரயில் நிலையம் அருகில் வைத்து போலீசார் தடுத்தனர். பின்னர் பாலக்காட்டில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி வந்த மாணவர்கள் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தண்டவாளத்தில் படுத்திருந்த ஒவ்வொருவராக குண்டு கட்டாக தூக்கி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர் இதில் மாணவர்கள் சட்டை கிழிந்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
போலீசார் கைது செய்தனர்.
 
பத்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வெளியேற்றியதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு திருச்செந்தூர் ரயில் புறப்பட்டது. தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் 12 மாணவிகள் 8 மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் திருப்பரங்குன்றம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 65க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget