மேலும் அறிய
Madurai AIIMS - மதுரை எய்ம்ஸ் 'நீண்ட கால நடைமுறை' என நீதிமன்றம் விளக்கம் !
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடித்து, நிர்வாகப் பணிகள் மற்றும் பிற பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது ஒரு நீண்ட கால நடைமுறை.

மதுரை குறித்தான வழக்கு
Source : whatsapp
மதுரை தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு உத்தரவு.
2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது
மதுரை சேர்ந்த கேகே ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், " 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. பின்னர் 2018 ஆம் ஆண்டு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் 2021ல் 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2026 ஜனவரி மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. எனவே, மதுரை தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இந்த விவகாரத்தில் தவறான உறுதியை அளிக்கும் அரசு அலுவலர்களுக்கு அதிக அபராதத்தை விதிக்கவும் உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
ஒரு நீண்ட கால நடைமுறை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, "மனுதாரர் ஒரே கோரிக்கைக்காக மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடித்து, நிர்வாகப் பணிகள் மற்றும் பிற பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது ஒரு நீண்ட கால நடைமுறை என்பதை மனுதாரர் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே அவருக்கு உயர்நீதிமன்றம் 50,000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் 5000-மாக குறைத்துள்ளது" எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















