மேலும் அறிய

Madurai Hc: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு: தென்மண்டல ஐ.ஜிக்கு நீதிமன்றம் பாராட்டு !

காவல்துறையிடம் புகார் அளித்தால் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என காவல்துறையின் மீது சாமானிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - நீதிபதி கருத்து.

காவல் நிலையத்தில் வைத்து வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி வழக்கு.
 
வழக்கறிஞர் மீது தாக்குதல்
 
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமாரன் தாக்கல் செய்த மனு. மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற, "தன்னை தாக்கிய துணை காவல் கண்காணிப்பாளர் DSP  மீது மேலூர் நீதித்துறை நடுவரின் உத்தரவின் அடிப்படையில், மேலூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, “வழக்கறிஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் மனுதாரர் புகார் அளித்துள்ளார். இருப்பினும் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் மேலூர் நீதித்துறை நடுவர் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 
ஒரு வழக்கறிஞர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உள்ள சூழலில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த வழக்கை முறையாக மேலூர் காவல்துறை ஆய்வாளர் விசாரணை செய்யவில்லை எனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
 
இந்நிலையில், ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  அதில், "உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  உடனடியாக வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது. 
இதில் ரவிக்குமார், உதவி ஆணையர் ஆர்.எஸ்.புரம் மண்டலம், கோயம்புத்தூர் தற்போது பணிபுரிந்து வருகிறார் ராஜபாளையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சார்லஸ் மற்றும்  காவலர்கள் கஜேந்திரன், பேரையூர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் ஜெயம் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 166, 294(b), 323, 506(i) IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வழக்கு பதிய  காலதாமதம் செய்த மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அக்காலகட்டத்தில் காவல் நிலைய அலுவலராக செயல்பட்டவர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஐ.ஜிக்கு பாராட்டு
 
இதனை பார்த்த நீதிபதி தென்மண்டல காவல்துறை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததை இந்த நீதிமன்றம் பாராட்டுகின்றது.  காவல்துறையிடம் புகார் அளித்தால் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என காவல்துறையின் மீது சாமானிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் வழக்கறிஞரை துணை காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டே ஆறு மாதங்கள் ஆகியும், காவல்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுமில்லை. உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை பொதுமக்களிடையே காவல்துறை அதிகாரிகள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால், அதில் தங்களுக்கு நீதி கிடைக்காது எனும் எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. தவறு செய்த  காவலர்கள்  மீது உரிய நடவடிக்கையை எடுத்து, காவல்துறையின் கௌரவத்தை பாதுகாத்ததற்காக தென் மண்டல காவல்துறை தலைவருக்கு நீதிமன்றம் மீண்டும் பாராட்டுகளை தெரிவிக்கிறது. என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget