மேலும் அறிய
மதுரை மாணவர்கள் இஸ்ரோ பயணம்: வியப்பில் ஆழ்த்தும் அறிவியல் கனவு.. ஆணையர் வாழ்த்து !
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை காண்பதற்கு செல்லும் மாணவ, மாணவிகளை மாநகராட்சி ஆணையாளர் மதுரை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இஸ்ரோ பயணம்
Source : whats app
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை காண்பதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை ஆணையாளர் சித்ரா விஜயன், வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை காண்பதற்கு சுற்றுப்பயணம்
மதுரை மாவட்டத்திலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை காண்பதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை விமான நிலையத்தில் இருந்து வாழ்த்தி இன்று (28.09.2025) வழியனுப்பி வைத்தார்கள். மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 26 ஆரம்பபள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மாதம் 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு ஹைதாரபாத்தில் உள்ள அறிவியல் மையத்தை பார்வையிட்டு உள்ளார்கள்.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
அதன் தொடர் நிகழ்வாக மதுரை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் மதுரை மிட்டவுண் இணைந்து ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை காண்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரிசூர்யா பிரகாஷ், ஈ.வெ.ரா பெண்கள் மாநகராட்சி பள்ளி மாணவி தாயூபா, காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியதர்சினி, திரு.வி.க.மேனிலைப்பள்ளி மாணவன் கோகுல், நாவலர்சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவசக்தி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மாணவி சாதானா, பாரதிதாசானார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் தரணிதரன், பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் கார்த்திகேயன், மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி உதயாஸ்ரீ, பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிஸ்ரீ, சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெய்ரூஸ்ராஜன் ஆகிய 5 மாணவர்கள், 6 மாணவிகள் உட்பட மாசாத்தியார் பெண்ள் மேல்நிலைப்பள்ளி உமாமகேஸ்வரி முதுகலை பட்டதாரி ஆசிரியரும் என மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 12 நபர்களும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மாணவ, மாணவிகள் 20 நபர்கள் உட்பட மொத்தம் 32 மாணவ, மாணவிகள் செல்கிறார்கள்.
ஆணையாளர் அவர்கள் மதுரை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை காண்பதற்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆணையாளர் மதுரை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், கல்விப்பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















