மேலும் அறிய
Crime : பெண்கள் குளிக்கும் வீடியோவை டாக்டருக்கு அனுப்பிய மாணவி..! மதுரையில் ஒரு சண்டிகர் சம்பவம்..!
காவல்துறையினர் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை எனத் தெரிந்தது. இதனால், டாக்டர் ஆசிக், மாணவி காளீஸ்வரி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அதே விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக விடுதி மாணவியையும், கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர். இதுதொடர்பாக விடுதி மாணவியையும், கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். #Madurai pic.twitter.com/n2Uz4qytE3
— arunchinna (@arunreporter92) September 25, 2022
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் - வயது 31 . இவர் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்துவுிட்டு கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் ஆசிக் என்பவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகிவிட்டது. இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார். இவருக்கும், கமுதியைச் சேர்ந்த டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பல ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது.
இதற்கிடையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்துவரும் காளீஸ்வரி, உடன் தங்கியுள்ள மற்ற பெண்களின் குளியல் அறை காட்சிகள், உடைகள் மாற்றும் காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து டாக்டர் ஆசிக் என்பவருக்கு அனுப்பிவந்துள்ளார். இப்படி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அவர், காளீஸ்வரியின் செல்போனை பார்த்தபோது அதுபோன்ற போட்டோக்கள், வீடியோக்கள் நிறைய இருந்துள்ளன.
” இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் “ - மதுரையில் புத்தகத் திருவிழா - அமைச்சர்களுக்குள் மோதலா? மேயர் செயலால் வலுக்கும் சந்தேகம்...!
இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் மாற்றப்பட்டு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கை விசாரித்தார். காவல்துறையினர் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை எனத் தெரிந்தது. இதனால், டாக்டர் ஆசிக், மாணவி காளீஸ்வரி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்டிகரிலும் இதேபோல பல்கலைகழக மாணவிகள் குளிப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion