மேலும் அறிய

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது - உயர்நீதிமன்ற உத்தரவு !

தமிழக அரசு குறிப்பிட்டுள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

திடக்கழிவுகளால் ஏற்படும் சுகாதார பாதிப்பு அபாயம் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை - நீதிபதி.

திருவிழாவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரிய வழக்கு - மதுரை அமர்வு
 
திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்..," திருச்சி பீமாநகரில் செடல் மாரியம்மன் கோயில் உள்ளது. வைகாசி தேர் திருவிழா நடத்த வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். திருவிழா நடத்த உத்தரவிட வேண்டும், என்றார். இவ்வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. 
 
கோயில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதிடுகையில்,
 
பக்தர்கள், மண்டகப்படிக்கு தகுதியுடையவர்கள் என உரிமை கோரும் நபர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஒவ்வொரு திருவிழாவின்போதும், இத்தகைய முரண்பட்ட உரிமை கோரிக்கைகள் எழுகின்றன. இதனால் திருவிழாவை நடத்த இயலாத நிலையில் செயல் அலுவலர் உள்ளார். 
 
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சக்திவேல் வாதிடுகையில்,
 
யாருக்கும் எவ்வித சிறப்பு சலுகையும் இன்றி, செயல் அலுவலரே திருவிழாவை நடத்தலாம். இதில் மனுதாரருக்கு ஆட்சேபனை இல்லை. கிராமத்திலுள்ள பிறரும் இதை ஏற்றுக்கொள்வர். திருவிழா நடத்தப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. என வாதம் நடந்தது.
 
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி,
 
ஒவ்வொரு கோயில் திருவிழாவின்போதும், கிராமம் முழுவதும் மற்றும் பிற பகுதிகளில் குப்பை சிதறடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விழா சடங்குகள் நடத்த மற்றும் சிறப்பு சலுகை உரிமைகளை நிலைநாட்ட பலர் இந்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். அத்திருவிழாக்களின் விளைவாக உருவாகும் திடக்கழிவுகள் குறித்தோ அல்லது அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்பு அபாயம் குறித்தோ யாரும் கவலை கொள்வதில்லை. பல கிராமங்களில், கோயில் திருவிழாக்களைத் தொடர்ந்து தொற்றுநோய்கள் பரவுகின்றன. எவ்வித சிறப்பு சலுகையும் கோரப்போவதில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
 
ஜாதி, மதம் பாகுபாடின்றி இணைந்து திருவிழா நடத்த வேண்டும்
 
அதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திருவிழா நடத்த அனுமதிக்கப் படுகிறது. கோயில் சார்பில் யாருக்கும் எவ்வித சிறப்பு சலுகையும் அளிக்கப்படாமல், அப்பகுதி மக்கள் அனைவராலும் ஜாதி, மதம் பாகுபாடின்றி இணைந்து திருவிழா நடத்த வேண்டும். திருவிழாவை நடத்துவதென முடிவு செய்யப்படுமாயின், அப்பகுதிகளில் தற்காலிக குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கோயில் திருவிழா நடைபெறும் காலங்களில் கோயில் வளாகத்திற்குள் அல்லது ஊர்வலத்தின் போதோ எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது, என உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget