மேலும் அறிய

மதுரையில் வளர்ச்சிப் பணிகள்: ரூ.53 லட்சம் மதிப்பிலான 10 வளர்ச்சிப் பணிகளை திறந்து வைத்த எம்.பி!

மதுரை மாநகராட்சி பகுதிகளில் 10 பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.

ரூ.53 லட்சம் மதிப்பிலான 10 வளர்ச்சிப் பணிகளை திறந்து வைத்தார் சு.வெங்கடேசன் தமிழகத்திற்கு நிலுவை நிதிகளை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.

வளர்ச்சிப் பணிகள்
 
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.53 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட 10 வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பணிகளை திறந்து வைத்தார். 
 
திறந்து வைக்கப்பட்ட பணிகள்:
 
வார்டு 58 – மஞ்சளமேடு காலனி சமுதாயக்கூடம்
வார்டு 59 – அம்பேத்கர் நகர் சிண்டெக்ஸ் குடிநீர் வசதி
வார்டு 59 – காந்திஜி காலனி சிண்டெக்ஸ் குடிநீர் வசதி
வார்டு 77 – சுப்பிரமணியபுரம் மார்க்கெட் உயர் மின் கோபுரம்
வார்டு 75 – எம்.கே.புரம் உயர் மின் கோபுரம்
வார்டு 83 – சோலையழகுபுரம் 2-வது தெரு, ராமமூர்த்தி நகர் சந்திப்பு உயர் மின் கோபுரம்
வார்டு 82 – சோலையழகுபுரம் 3-வது தெரு, மடப்புரம் காளிகோவில் சந்திப்பு உயர் மின் கோபுரம்
வார்டு 75 – தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உயர் மின் கோபுரம்
வார்டு 73 – அழகப்பன் நகர் ரயில்வே கேட் சந்திப்பு உயர் மின் கோபுரம்
வார்டு 73 – அழகப்பன் நகர் – பாலாஜி நகர் சந்திப்பு, முத்துப்பட்டி மெயின் ரோடு உயர் மின் கோபுரம்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் கூறியதாவது:
 
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதி மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சமமாக பகிர்ந்தளித்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய முன்தினம் மேலூர் தொகுதியில் நிறைவு பெற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று மாநகராட்சி பகுதிகளில் 10 பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.
 
தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தமிழகத்திற்கு வரி பகிர்மானம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட வேண்டிய நிதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கல்வித் திட்டங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளை ஒன்றிய அரசு தனது கொள்கைகளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget