மேலும் அறிய
Madurai HC: நடிகை கௌதமியிடம் பண மோசடி செய்த இருவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு
மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதால் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நடிகை கெளதமி
Source : whats app
நடிகை கெளதமி பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது. முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், போலீஸ் மற்றும் செபி உள்ளிட்டவைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நடிகை கெளதமியிடம் நிலம் மோசடியாக விற்பனை செய்துள்ளதாக புகார்
நடிகை கெளதமி ராமநாதபுரம் காவல்நிலையத்தில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி அழகப்பன் என்பவர் 3 கோடி வாங்கியிருந்தார். இந்நிலையில் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சுவாத்தான் கிராமத்தில் 57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலத்தினை வாங்கி கொடுத்தார். ஆனால் பிளசிங் பார்ம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு செபி அமைப்பு தடை செய்துள்ளதை மறைத்து மோசடியாக என்னிடம் விற்பனை செய்துள்ளார், அழகப்பன். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது, ராமநாதபுரம் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அழகப்பன், அவரது மனைவி ஆர்த்தி, ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என நடிகை கவுதமி தரப்பில் தாக்கல் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் நேரில் ஆஜர்
இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. நடிகை கௌதமியும் நீதிமன்றம் வந்திருந்தார். நடிகை கவுதமி தரப்பில் அழகப்பன் மற்றும் தொடர்புடையவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், " குற்றம்சாட்டப்பட்ட நபரின் உறவினர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி
இதையடுத்து நீதிபதி, வழக்கின் 6 குற்றவாளிகளில், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். பின்னர், கௌதமியிடமிருந்து வாங்கிய பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால் முக்கிய குற்றவாளிகளான அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அழகப்பன், ஆர்த்தி ஆகியோரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது. முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், போலீஸ் மற்றும் செபி உள்ளிட்டவைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க, வேண்டும் நீதிபதி தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement