மேலும் அறிய
கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம், பட்டாசு விபத்துக்கு ரூ.4 லட்சம்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நிவாரணம் வழங்குவதில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்ப்பதை விட, அம்மா ஆட்சி காலத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்.

ஆர்.பி.உதயகுமார்
Source : whats app
கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலையில் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ரூபாய் ஏன் இந்த பாரபட்சம் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடரும் பட்டாசு விபத்து
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,” சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில், சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் இறந்தார்கள். இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், இறந்த குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அவர் விருதுநகர் மாவட்டம் வந்த போது அங்கே சென்று பட்டாசு ஆலை எப்படி இயங்குகிறது, தொழிலாளர்கள் எப்படி அங்கே பணி செய்கின்றார்கள், அவர்களுக்கு பணி பாதுகாப்பு என்ன என்று? ஒரு மேஜிக் ஷோவை அவர் மாடல் சோவாக நடத்திக் காட்டினார்.
ஆனால் அதற்குப் பிறகு எந்த பலனும் அந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை, விபத்து எண்ணிக்கை குறையவில்லை. இவற்றை தடுத்து நிறுத்தப்படவில்லை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
கள்ளச்சாராயத்திற்கு ரூ.10 லட்சம் - பட்டாசு வெடி விபத்திற்கு ரூ.4 லட்சம்
ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அந்த குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. அப்படியானால் கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறார்களா?. ஒரு தொழிலாளி தன் வாழ்வாதத்திற்காக உயிரை பணயம் வைத்து பணி செய்து மரணம் அடைந்தால், நான்கு லட்சம் தானா?, சுகத்திற்காக கள்ள சாராயம் குடித்து உயிருந்தால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அப்படி என்றால் இந்த அரசு உழைப்பவர்களுடைய உயிரை எவ்வளவு மலிவாக மதிப்பீடு செய்து இருக்கிறது, என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அம்மாவின் ஆட்சியோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
நிவாரணம் வழங்குவதில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்ப்பதை விட, அம்மா ஆட்சி காலத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வெள்ள நிவாரணம், தீ விபத்து, வெடி விபத்து இதற்கு தான் நிவாரணம் வழங்குவார்கள். ஆனால் இந்தியாவிலேயே வறட்சிக்காக நிவாரண வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு தான். ஏறத்தாழ 2,247 கோடி அளவில் வளர்ச்சி நிவாரண தொகையை அம்மா அரசு வழங்கியது. அதேபோல காவல்துறையில் பணிபுரிந்த அச்சுறுத்தப்பட்டு அதன் மூலம் மரணம் அடைந்த காவலர் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த காவல்துறைக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி எடப்பாடியார் வழங்கினார். அதேபோல பயிர் காப்பீடு திட்டத்தின் 5,318 கோடி அளவில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 12 லட்சம் விவசாயிகளை பயனடைந்தனர், அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 12,110 கோடி விவசாயகள் வாங்கிய கடனை ரத்து செய்யப்பட்து. இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர்” என குறிப்பிட்டு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















