மேலும் அறிய
Advertisement
எளியவர்கள் கையிலும் ஆன்லைன் பேமெண்ட் ; மூலை முடுக்கெல்லம் டிஜிட்டல் வளர்ச்சி !
டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைக்கு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் தற்போது கூகுள் பே போன் பே QR Code ஸ்கேனர்களைக் தனது செருப்பு தைக்கும் கடையிலும் வைத்துள்ளார். இது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிஜிட்டல் எல்லா இடங்களிலும் கடந்த சில வருடங்களில் ஊடுருவ ஆரம்பித்துவிட்டது. மிகப்பெரும் மால் முதல் பெட்டிக்கடை வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் காலணி தைக்கும் தொழிலாளியின் கடைக்கு வந்தது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். டிஜிட்டல் இந்தியா கொள்கை பல கட்டங்கள் முன்னோக்கி வருகிறது. அதில் பிரதான ஒன்றாக இருப்பது டிஜிட்டல் பரிவர்த்தனை. சிறிய கடை முதல் பெரிய கடை வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய பொருள் வாங்கினால் கூட ஸ்கேனர் போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வி அனைவராலும் கேட்கத் தொடங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன், அவரது தந்தை காலத்தில் இருந்து 50 வருடங்களாக செருப்பு தைக்கும் தொழிலை மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் செய்து வருகின்றனர் இந்நிலையில் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைக்கு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் தற்போது கூகுள் பே போன் பே QR Code ஸ்கேனர்களைக் தனது செருப்பு தைக்கும் கடையிலும் வைத்துள்ளார். இது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் தயாரிப்பு - 2 பேர் கைது; 400 கிலோ டீ தூள் பறிமுதல்
மேலும் செய்திகள் படிக்க - மு.க அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்த நிதி அமைச்சரின் ஆதரவாளரால் பரபரப்பு - திமுகவில் மீண்டும் முக அழகிரியின் கை ஓங்குகிறதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
ஐபிஎல்
க்ரைம்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion