மதுரையில் மாடு முட்டிய முதியவர் உயிரிழப்பு; பொதுமக்களின் புகார்கள் மீது அலட்சியம்
உள்ளாட்சி நிர்வாகம் இனியாவது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று நபர்களை முட்டித் தள்ளியது
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரதான சாலைகளில் மாடுகள் தொடர்ந்து சுற்றித் திரிவதால் விபத்துகள் அதிகரித்துவருகிறது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் வாகனங்கள் மீது மோதுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்தும் உடல் உறுப்புகள் காயம் ஏற்பட்டு வருகிறது. இதே போன்று பொதுமக்கள் நடந்து செல்லும் போது கால்நடைகள் திடீரென பொதுமக்களை முட்ட செல்வதாலும் அவர்கள் பதறி ஓடிச்சென்று வாகனங்களில் மோதி நடைபெறும் விபத்துகளும் தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென அந்த வழியாக சென்ற மூன்று நபர்களை அடுத்தடுத்து முட்டித் தள்ளியதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் காரைக்குடி திருமயம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (64) என்ற முதியவர் தனது பேத்தியை பார்ப்பதற்காக வந்துவிட்டு டீ கடையில் டீ குடிக்க சென்றபோது, காளைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு லெட்சுமணனை முட்டி தள்ளியது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
- Indian 2: இந்தியன் தாத்தாவுக்கு கிடுக்குப்பிடி! வர்மக்கலையால் வந்த சோதனை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாடுமுட்டியதில் காயமடைந்து உயிரிழந்த சோகம்
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த காளையானது, லெட்சுமணனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த செல்லத்தாயி(65) என்ற மூதாட்டியையும், தூய்மை பணிகளில் ஈடுபடும் ஒரு நபரையும் அடுத்தடுத்து முட்டிதள்ளியுள்ளது. இதில் மாடு முட்டி தள்ளியதில் கீழே விழுந்த லெட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது மகள் தனது தந்தையை நினைத்து கண்ணீர்மல்க கதறி அழுவது காண்போரை கலங்கவைக்கிறது. தனது பேத்தியை பார்க்க வந்த முதியவர் சாலையில் திரிந்த மாடுமுட்டியதில் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் இனியாவது நடவடிக்கை?
ஒத்தக்கடை பகுதி மாநகராட்சி எல்கை பகுதி என்பதாலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் பிரதான சாலையான தி்ருச்சி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலைகளிலும் மாடுகள் சுற்றி திரிவதால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகம் இனியாவது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கள்ளக்குறிச்சி விவகாரம், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து சிபிஐ விசாரணை தேவை - காடேஸ்வரா சுப்பிரமணியம்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Dharmapuri New Announcement: பிளானில் 7, திடீரென வந்த 8 - தருமபுரி மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்! என்னென்ன?