மேலும் அறிய
Advertisement
ஆண்ட பரம்பரை என்று சொன்னேனா.. கேசட்ட ஒழுங்கா பாருங்க - அமைச்சர் மூர்த்தி பதில்
ராஜ ராஜ சோழன் மன்னர்கள் ஆண்டது எனக் கூறியதை மட்டும் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை 2025 ஜல்லிக்கட்டு போட்டிகள்
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பொங்கல் அன்று முதல் தொடர்ச்சியாக நடைபெறும். தற்போது கூடுதலாக அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி கீழக்கரை பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவனியாபுரத்தில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு பணிகள் மேற்கொள்வதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 54 லட்சத்து 26 ஆயிரம் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக இன்று முகூர்த்தக்கால் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பராமரிப்பு சார்பாக தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா மேடை , குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது .
சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில், “அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசளிக்க விரும்புபவர்கள் பரிசளிக்கலாம். உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எல்லாம் ஆன்லைன் தான். பரிசளிப்பதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் 3000 பேருக்கு தான் டோக்கன் கிடைக்கும், ஒன்பதாயிரம் பேருக்கு கிடைக்காது. ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த குறையும், எந்த பாகுபாடும் இருக்காது. அவனியாபுரத்தில் அனைத்து கமிட்டியும் ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்து இருந்தால் நிரந்தர வாடிவாசல் அமைப்பதற்கு அரசு தயாராக தான் உள்ளது. மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த பிறகு அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் தனியார் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம். மாமதுரை சார்பாக வரும் 18, 19ஆம் தேதி பலூன் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது” என்றார்.
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது குறித்த கேள்விக்கு
”அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் பொதுவான ஆளு, அந்த கேசட் வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு பேசுங்கள். நான் ஆண்ட பரம்பரை என சொன்னது, ராஜராஜ சோழன் காலத்திலிருந்து மன்னர்கள் ஆட்சி செய்ததுதான் சொன்னேன். அதை எடிட் செய்து போட்டுள்ளனர். முழுமையாக வீடியோவை பாருங்கள் அமைச்சர் என்பவர் பொதுவான ஆளு. 1981இல் ஒரு போராட்டம் நடக்கிறது. அதில் ஒரு 5000 பேர் இறந்துள்ளனர். இதை ஆங்கிலேயர்கள் கெஜட்டில் உள்ளது. அந்த வரலாறு இது மாதிரி எல்லாம் இறந்து இருக்கிறார்கள். நீங்கள் படித்து அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபட வேண்டும். ராஜ ராஜ சோழன் மன்னர்கள் ஆண்டது எனக் கூறியதை மட்டும் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion