மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மீண்டும் டைடல் பார்க் பணி.. கிடைத்தது கிரீன் சிக்னல்
மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

44 ஆண்டுகளுக்கு முன்னர் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளதே, அப்படி இருக்கையில் இதை நீர் நிலை என எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பினார்.
மதுரையில் டைடல் பார்க்
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் டைடல் பூங்கா உருவாக்கி இருப்பதை போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து டைடல் பார்க் அமைக்கப்படும் என சட்ட மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு அதற்காக சோதனைப் பணிகளும் செய்யப்பட்டுவிட்டன. இதன் முழுவீச்சு பணியாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் நெல் வணிக வளாகத்திற்கு இடையில் மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தை டைடல் பூங்காவிற்காக மதுரை மாநகராட்சி தரப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
5000 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு வேலை
இதில் சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 12 தளங்களுடன் கூடிய மதுரை டைடல் பூங்காவிற்கான நிர்வாகரீதியான பணிகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கட்டடம் கட்டுவதற்கானபணிக்கான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூபாய் 289 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த டைடல் பூங்காவில், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு பெற உள்ளனர். இத்திட்டத்திற்கு சுற்றுச் சூழல்தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. பின்னர், சிறு திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு அதற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. அனைத்துவித மான முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தது. மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிக்கான துவக்கவிழா கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற்று முடிந்ததது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சில் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த சூழலில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு
மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள்
44 ஆண்டுகளுக்கு முன்னர் நிலம் வகைப் படுத்தப்பட்டுள்ளதே, அப்படி இருக்கையில் இதை நீர் நிலை என எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பினார்.
மனுதாரர்
வருவாய் துறையினர் தான் நிலத்தை வகைப்படுத்த முடியும் ஆனால் இந்த விவகாரத்தில் மாநகராட்சி வகைப்படுத்தி உள்ளது அதனை எப்படி சட்டபூர்வமானது கருத முடியும்
நீதிபதிகள்
இந்த சூழலில் இந்த மனுவை ஏற்க முடியாது எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.




















