மேலும் அறிய
Advertisement
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரதம்
உண்ணாவிரத போராட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டியில் விவசாயிகள் ஒருங்கிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர் - விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக உள்ளது உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டம், சுமார் 100 கோடி வரை செலவு செய்து கட்டமைப்பு செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஒவ்வொரு ஆண்டும் போராடியே நீரை பெரும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டியில் விவசாயிகள் ஒருங்கிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர் - விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர்.... pic.twitter.com/25jx8thQM5
— arunchinna (@arunreporter92) December 1, 2023
இந்த திட்டத்திற்கு வைகை அணையின் நீர் மட்டம் 65 அடி எட்டியதும் தண்ணீர் திறக்க அரசானை வழங்க கோரியும், தற்போது வைகை அணை நிரம்பி உள்ள சூழலில் இந்த 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ள சூழலில் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகளும், அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய பார்வட் ப்ளாக், பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் உள்ளிட்ட பல்வேறு பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகிகள், இடதுசாரி கட்சி நிர்வாகிகள் சமுக அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.,
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்து - மீட்பு பணியில் தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், முடிவுகளும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion