மேலும் அறிய
Advertisement
மதுரை விமான நிலையத்தில் அடாவடி செய்யும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள்; கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி
மதுரை விமான நிலையத்தில் அடாவடி செய்யும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள். - நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி
Madurai airport
மதுரை விமான நிலையத்தில் பயணிகள் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் அவர்கள் உறவினர்களும் அதே போல் மற்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளை வரவேற்க அவர்களது உறவினர்களும் வருகை புரிவர். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வருகை தரும் பயணிகளின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் வருகை பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மதுரை விமானநிலையத்தில்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 30, 2024
பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது.… pic.twitter.com/xCt9l8Q7Qn
அதிகளவு பயணிகள்
தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்குள் உள்ளே சென்ற வாகனங்கள் 3 நிமிடத்திற்கு மேல் இருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மூன்று நிமிடத்திற்குள் வெளியே சென்றால் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் சுங்கச்சாவடி சார்பில் அறிவிப்பு பலகை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை வாகனங்கள் வந்து செல்லும் பாதை முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள் வரும்பொழுது மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் பயணிகள் வாகனங்கள் வந்து செல்வதற்கு தாமதம் ஏற்படும்.
கூடுதல் வசூல் வேட்டை
இந்த நிலையில் மதுரை விமான நிலையம் சுங்கச்சாவடியை வடமாநிலத்தவர் டெண்டர் எடுத்துள்ளதால் தினசரி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வாகனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவு வசூல் செய்கின்றனர். அரை மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அறுபது ரூபாய் பணம் கேட்கும் மதுரை விமான நிலைய சுங்கச்சாவடி ஊழியர்கள் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வட மாநில ஊழியர்களின் செயல் குறித்து பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்றபோது வட மாநில ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டு 20 ரூபாய் கட்டணத்திற்கு பதில் 60 ரூபாய் முதலில் கேட்டுள்ளார். அதிக பணம் கேட்டு வசூல் செய்யும் காட்சியை வீடியோவாக எடுக்கப்பட்ட பின்னர்.
நடவடிக்கை தேவை
தொடர்ந்து பயணி வீடியோ எடுப்பதை அறிந்து வடமாநில சுங்கச்சாவடி ஊழியரும் வீடியோ எடுத்து வாக்குவாதம் செய்வது போல சித்தரிக்க முயற்சி செய்து கட்டணம் 20 ரூபாய் தருமாறு கூறியுள்ளார். அதற்கு பயணி முதலில் 60 ரூபாய் கேட்டுவிட்டு இப்போது இருபது ரூபாய் தருமாறு கூறுகிறீர்கள் என விவாதம் செய்துள்ளது. தற்போது இந்த காட்சி மீண்டும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ‘ - அமைச்சர் பெயரில் முறைகேடு: திருநங்கைகளை ஒப்பாரி வைக்க வைத்து கவனம் ஈர்த்த காளை உரிமையாளர்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion