மேலும் அறிய
இதை சரி செய்ய எடப்பாடியார் ஒருவரால்தான் முடியும் - ஆர்.பி.உதயகுமார்
மக்களை ஏமாற்றுவதில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது. கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
Source : whats app
திமுக ஆட்சியில் தமிழகத்தின் முதுகெலும்பு உடைந்து விட்டது. இதை சரி செய்ய எடப்பாடியார் ஒருவரால்தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
பொய்யை மெய்யாக பேசுவதில் கின்னஸ் சாதனை
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்..,” கடந்த சட்டமன்றத் தேர்தலில் தெரிந்தோ, தெரியாமலோ 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்தார். அதில் 15 சதவீதம் தான் நிறைவேற்றி உள்ளார். ஆனால் தற்போது ஒரு அரசு விழாவில் 364 தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி விட்டோம், என்று அரசு விழாவில் பச்சை பொய்யை முதலமைச்சர் பேசுகிறார். ஆட்சிக்கு வந்து எதை கற்று கொண்டாரோ என்று தெரியவில்லை, ஆனால் பொய் பேசுவதை மட்டும் கற்றுக் கொண்டுள்ளார். அதிலும் பொய்யை மெய்யாக பேசுவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
உடைந்த முதுகெலும்பை சரி செய்ய வேண்டும்
40 அறிவிப்புகள் பரிசீலனையில் இருப்பதாகவும், 37 திட்டங்கள் மத்திய அரசிற்காக பரிசீலனையில் உள்ளதாகவும், 64 திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது என்று கூறியுள்ளார். பொதுவாக திட்டங்கள் குறித்து அறிவிக்கும் போது தெரிந்து அறிவிக்க வேண்டும். ஆனால் இதை தெரியாமல் அறிவித்தாரா அல்லது தெரிந்து அறிவித்தாரா இல்லை, மக்களை ஏமாற்ற இதுபோன்று பேசுகிறாரா. குறிப்பாக இன்றைக்கு தலை நிமிர்ந்து தமிழகம் என்று கூறுகிறார்கள் ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் தமிழகத்தின் முதுகெலும்பு உடைந்து போய்விட்டது. தமிழகத்தின் முதுகெலும்பை உடைத்து தான் திமுகவின் சாதனையாக உள்ளது. இந்த உடைந்த முதுகெலும்பை சரி செய்ய எடப்பாடியார் ஒருவரால் தான் முடியும்.
பொய் பேசுவதில் முதலிடம்
இன்றைக்கு 118 தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்று எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நிச்சயம் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்வகையில் இந்த எழுச்சி பயணம் அமைந்துள்ளது. இன்றைக்கு தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். பச்சை பொய் பேசுவதில் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். தமிழகத்தில் பாலியல் பிரச்னைகள் முதலிடத்தில் உள்ளது. நிர்வாக சிக்கலில் முதலிடத்தில் உள்ளது. மக்களை ஏமாற்றுவதில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது. கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு எடப்பாடியார் முதலமைச்சர் வரவேண்டும்.
நீட் தேர்வு தொடர்பாக பேசி மறைக்க முடியாது
இன்றைக்கு திமுக அரசு விழாவில் செயற்கையாக நடத்தப்பட்டு, அதில் மக்களை அழைத்து வருகிறார்கள். அந்த கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. 2011 ஆண்டில் வடிவேலுக்கு கூட்டம் அதிகமாக வந்தது, அப்படி இருந்த போதும் 2011 ஆண்டில் திமுக எதிர் கட்சியாக கூட வர முடியவில்லை. இன்றைக்கு திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாக கோபத்தில் உள்ளார்கள் இந்த கோபத்தை விளம்பரத்தால் மறைக்க முயற்சிக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை செய்வோம் என்று கூறினார்கள் அதை மறைக்க இன்றைக்கு மோடி மாஸ் தான் வேலையை ஸ்டாலின் செய்கிறார். 2026 ஆண்டில் எடப்பாடியார் கோட்டைக்கும், ஸ்டாலின் வீட்டுக்கு போவார்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















