மேலும் அறிய

“மதுரையில் இயங்கும் நிறுவனத்தின் சாப்ட்வேர்களை சீனாவில் இருந்து கூட இயக்க முடியும்” - மென் பொறியாளர் சொன்ன திடுக் தகவல்

டக்கர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உரிய பாதுகாப்பு இன்றி செயல்படுவதாகவும் அவர்களது சாப்ட்வேர்களை சீனாவில் இருந்து கூட இயக்கும் அளவிற்கு பாதுகாப்பற்றது எனவும் மென் பொறியாளர் குற்றச்சாட்டு.

TUCKERS மோட்டார்ஸ் நிறுவனத்தின் உண்மை தகவல்களை வெளியில் சொல்லி விடுவேன் என்பதற்காக தன் மீது தவறான பொய் புகார்களை அளித்துள்ளதாக கணினி பொறியாளர் புகார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இயங்கும் நிறுவனம்

மதுரை மாநகர் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ் என்ற தம்பதியினர் கடந்த  6 ஆண்டுகளாக TUCKER MOTORS PVT LTD என்ற இ - கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சார்ஜிங் ஸ்டேசன்கள் முழுவதும் சாப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்ராஜ் பிராகல்யா தம்பதியினரின் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த சிவா என்ற மென்பொருள் பொறியாளரை தங்களின் TUCKER MOTORS நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர்கள் மற்றும் ஹார்டுவேர்களை திருடி சென்று விட்டதாக சில தினங்களுக்கு முன்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மென் பொறியாளர் புகார்

இந்நிலையில், TUCKER மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணினி மென்பொருள் பொறியாளாரான சிவா, டக்கர் மோட்டார் நிறுவன இயக்குநர்களான மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா தம்பதியினர் தன் மீது தவறான பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

சீனா நிறுவனம் கூட இயக்கலாம்

இதனைத்தொடர்ந்து பேசிய சிவா, “டக்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பாகங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்பு இல்லாமலும் எளிதில் தீப்பற்ற கூடியதாகவும் இருப்பதால் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகுவதாக நான் அவர்களிடம் கூறியதன் காரணமாக நானாகவே நிறுவனத்தில் இருந்து பணியில் இருந்து வெளியேறினேன். மேலும் அந்த நிறுவனத்தில் கல்லூரிகளில் இருந்து அழைத்துவரக்கூடிய மாணாக்கர்களை பயிற்சி அளிப்பதாக கூறி உரிய பயிற்சி பெறாத மாணாக்கர்கள் மூலமாக சார்ஜிங் ஸ்டேஷனுக்கான பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்கள் சாதாரணமாக சீனாவில் உள்ளவர்கள் கூட எளிதாக இயக்க கூடிய அளவிற்கு பாதுகாப்பற்றது. தான் நிறுவனத்தில் பணிபுரிந்து வெளியேறிய பின்பாக அவர்களுக்கு போட்டியாக தொழில் தொடங்கி விடுவேன் என்ற அச்சம் காரணமாக தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். இதுபோன்று பொய்யான புகார் அளித்த நிலையில் தனது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரிய நிறுவனத்தில் என்னை மட்டும் நம்பி எப்படி அனைத்து SOFTWARE மற்றும் ஹார்டுவேர்கள் கொடுக்க முடியும், அப்படி என்றால் பாஸ்வேர்டை அவர்களே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் எனவும் உடனடியாக பணிக்கு வராவிட்டால் கூலியாட்ககள் மூலமாக தூக்கி விடுவோம் என தனது அத்தையிடம் மோகன் ராஜன் மனைவி மிரட்டி பேசியதாகவும் தெரிவித்தார். என் மீது பொய்யான புகார் அளித்த மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் எனவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: "கவலப்படாதீங்க நான் உங்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுத்துத்தறேன்" - ரூ.49 ஆயிரம் அபேஸ் !

 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget