மதுரையில் சோகம்... பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் அலட்சியமாக இருந்ததாக 7 நபர்களிடம் போலீஸ் விசாரணை.

சிவ ஆனந்தி - அமுதன் தம்பதியினரின் மகளான ஆருத்ரா என்ற 4 சிறுமி இன்று காலை கே. கே நகர் பகுதியில் உள்ள கார்டன் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
மதுரை கே.கே நகர் பகுதியில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல் ) செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆருத்ரா என்கிற (4) வயது சிறுமி பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது நண்பர்களுடன் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உள்ளார்.
30 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீரில் கிடந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் ஆசிரியர்கள் 4 பேரை கைது செய்து காவல்துறையினர் அழைத்துசென்றனர்.
4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக ஸ்ரீ கின்டர் கார்டன் பள்ளியின் பள்ளி தாளாளர் திவ்யாராஜேஸ், மற்றும் பள்ளி பணியாளர்கள் மேனகா, ஐஸ்வர்யா, ஜெயபிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகிய 7 பேரிடமும் அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















