மேலும் அறிய
ரஜினி கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்.. பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபட்ட ரசிகர்கள்
ரஜினியின் சிலைக்கு ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ரஜினி கோயிலில் வழிபாடு
Source : whats app
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டியும், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும், திருமங்கலம் ரஜினி கோவிலில் பொங்கல் வைத்து ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தனர்.
திருமங்கலத்தில் ரஜினி கோயில்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் தொழில் மையம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் (51). இவர் தனது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக ரஜினியின் திரைப்படங்களின் புகைப்படங்களை, தனது வீட்டின் ஒரு அறை முழுவதும் சேகரித்து வைத்து, ரஜினியை குல தெய்வமாக வழிபட்டு வருகிறார். அவரது குடும்பத்தினரும் நாள்தோறும் வழிபடுவது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க பலமுறை முயன்றும் பார்க்க முடியாததால் ரஜினிக்காக கோயில் அமைக்க முடிவு செய்தார். இதற்காக 300 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன ரஜினியின் முழு உருவத்தில் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளாக, தனது வீட்டின் அறையில் வைத்து, அதற்கு ரஜினி கோயில் என பெயரிட்டுள்ளார். இந்த கோயிலில் பிற கோயில்களில் சாமிக்கு எவ்வாறு திருவாச்சி அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோன்று ரஜினியின் உருவ சிலைக்கும் திருவாச்சி அமைக்கப்பட்டு, நாள்தோறும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வருகிறார்.
ரஜினியின் சிலைக்கு ஆறு வகையான அபிஷேகங்கள்
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரஜினியை சந்திக்க அவரது அலுவலகத்தின் மூலம் கார்த்திக்கு தகவல் அளிக்கப்பட்டு தனது குடும்பத்தினரிடம் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரஜினிகாந்த் சந்தித்த பின்னரும் ரஜினி கோயிலில் தினந்தோறும் பூஜைகள் செய்து வரும் கார்த்திக் குடும்பத்தினர் நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, ரஜினியின் முழு உருவ சிலைக்கு அவரை குலதெய்வமாக வழிபடுவதால் சிலை முன்பு கார்த்திக் குடும்பத்தினர் ரஜினியின் சிலைக்கு ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















