மேலும் அறிய

சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும் - சு.வெங்கடேசன் எம்பி

கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் கோரிக்கை

சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை.
 
ரிசர்வு வங்கியே கடன் பெறும் தகுதியை தீர்மானிக்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி
 
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,” சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்காவின் தலைமையகமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம். இது 60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது.  சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது. உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது. ஒரே ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும். கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும். 
 
சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம்
 
எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என்று தெரிந்து கொள்வதற்காக ஒருவர் இரண்டு மூன்று வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தால் சிபில் ஸ்கோர் குறையும். சிபில் ஸ்கோர் குறைந்தது 300 அதிகம் 900. ஆனால் கடனே வாங்காதவருக்கு மைனஸ் ஒன், பூஜ்யம் என்று ஸ்கோர் வரும். அப்படியே அவருக்கு கடன் கிடைத்தாலும் வட்டி அதிகம் ஆகும். கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ற போல் வட்டி மாறும். பெரும்பாலான கடனாளிகளின் வட்டி கூடுதலாகும். 800 என்பதுதான் ஆகச்சிறந்த ஸ்கோர். அதை ஆக பெரும்பாலானவர்களால் அடையவே முடியாது. கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் படும் துயரத்துக்கு அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர். கடனே வாங்காத நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சிபில் ஸ்கோர் வருகிறது. ஆனால் அதை நேர் செய்வது மிகவும் கடினமான வேலை. சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம்.
 
அனைவருக்கும் சமமாக கார்ப்பரேட்டுகளுக்கும் பொருந்தும் படி அமைய வேண்டும்.
 
இது எதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடையாது. வேண்டுமென்றே பணத்தை திருப்பிக் கட்டாத wilful defaulter கடனை, தள்ளுபடி போக ஏதோ ஒரு தொகை, செலுத்தினாலும், ஒரு வருடம் கழித்து அவருக்கு மீண்டும் கடன் கிடைக்கும். 2002 வரை ரிசர்வ் வங்கி தான் கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானித்து வந்தது. அதற்குப் பிறகுதான் சிபில் உள்ளே நுழைந்தது. மொத்தத்தில் சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி. கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும். முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படை தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிப்பதற்கும், அதில் உள்ள குறைகளை எளிதாக தீர்ப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் சமமாக கார்ப்பரேட்டுகளுக்கும் பொருந்தும் படி அமைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Karur Stampede Case: “விஜய்க்கு தலைமை பண்பில்லை.. என்ன கட்சி இது” - தவெகவை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய நீதிபதி
Karur Stampede Case: “விஜய்க்கு தலைமை பண்பில்லை.. என்ன கட்சி இது” - தவெகவை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய நீதிபதி
Aadhav Arjuna: ’’ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை; பின்புலத்தை விசாரிங்க’’- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Aadhav Arjuna: ’’ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை; பின்புலத்தை விசாரிங்க’’- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
’’மக்கள் உயிரை காப்பது அரசின் கடமை; அரசியல் கூட்டங்களுக்கு தடை’’- நீதிமன்றம் பொளேர்!
’’மக்கள் உயிரை காப்பது அரசின் கடமை; அரசியல் கூட்டங்களுக்கு தடை’’- நீதிமன்றம் பொளேர்!
Trump Vs Israel: ட்ரம்ப் திட்டத்த சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே.! இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; காசாவில் 53 பேர் பலி
ட்ரம்ப் திட்டத்த சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே.! இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; காசாவில் 53 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

High Court Condemns Vijay : ‘’விஜய்லாம் ஒரு தலைவரா?கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல’’பொளந்து கட்டிய நீதிபதி
உடனே CALL பண்ண பிரதமர்! உடல்நலத்தை விசாரித்த CM! கார்கேவுக்கு என்னாச்சு?
5 நாட்களாக MISSING! ஆனந்துக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று நடக்கப்போவது என்ன
Roshni Nadar Profile : அம்பானி, அதானி வரிசையில்..முதல் இந்திய பெண் பணக்காரர்!யார் இந்த ரோஷ்னி நாடார்?
Vijay Arrest | விஜய் ARREST எப்போ?ஆணையம் சொல்வது என்ன?திமுக திடீர் அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karur Stampede Case: “விஜய்க்கு தலைமை பண்பில்லை.. என்ன கட்சி இது” - தவெகவை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய நீதிபதி
Karur Stampede Case: “விஜய்க்கு தலைமை பண்பில்லை.. என்ன கட்சி இது” - தவெகவை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய நீதிபதி
Aadhav Arjuna: ’’ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை; பின்புலத்தை விசாரிங்க’’- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Aadhav Arjuna: ’’ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை; பின்புலத்தை விசாரிங்க’’- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
’’மக்கள் உயிரை காப்பது அரசின் கடமை; அரசியல் கூட்டங்களுக்கு தடை’’- நீதிமன்றம் பொளேர்!
’’மக்கள் உயிரை காப்பது அரசின் கடமை; அரசியல் கூட்டங்களுக்கு தடை’’- நீதிமன்றம் பொளேர்!
Trump Vs Israel: ட்ரம்ப் திட்டத்த சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே.! இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; காசாவில் 53 பேர் பலி
ட்ரம்ப் திட்டத்த சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே.! இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; காசாவில் 53 பேர் பலி
TVK Stampede: கரூரில் 41 பேர் மரணம்.. சிபிஐ விசாரணையா? நீதிபதிகள் அளித்த பரபரப்பு தீர்ப்பு
TVK Stampede: கரூரில் 41 பேர் மரணம்.. சிபிஐ விசாரணையா? நீதிபதிகள் அளித்த பரபரப்பு தீர்ப்பு
Cough Syrup Banned: 11 குழந்தைகளை காவு வாங்கியதா இருமல் மருந்து.? தமிழகத்தில் ‘கோல்ட்ரிஃப்‘-க்கு தடை: நடந்தது என்ன.?
11 குழந்தைகளை காவு வாங்கியதா இருமல் மருந்து.? தமிழகத்தில் ‘கோல்ட்ரிஃப்‘-க்கு தடை: நடந்தது என்ன.?
TVK Vijay: ஒரு வாரத்தை நெருங்கும் கரூர் துயரம்; ஒருமுறையாவது செல்வாரா தவெக தலைவர் விஜய்? தாமதத்துக்கு இதுதான் காரணமா?
TVK Vijay: ஒரு வாரத்தை நெருங்கும் கரூர் துயரம்; ஒருமுறையாவது செல்வாரா தவெக தலைவர் விஜய்? தாமதத்துக்கு இதுதான் காரணமா?
மீன்பிடி திருவிழா: 3000 பேர் பங்கேற்பு! ஆர்வத்துடன் மீன்களை அள்ளிய கிராம மக்கள்!
மீன்பிடி திருவிழா: 3000 பேர் பங்கேற்பு! ஆர்வத்துடன் மீன்களை அள்ளிய கிராம மக்கள்!
Embed widget