மேலும் அறிய

நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி என்ன?

எனது கோரிக்கை நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது. - சு.வெங்கடேசன் எம்.பி.

ஒன்றிய அரசின் இதர பணிகளுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். - மதுரை எம்.பி
 
ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவுத் தேர்வு அறிவிப்பு.
 
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தியில்..," ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றி. தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஒன்றிய அரசு பணிகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நியமனங்களை பெறுவது, அலுவலக சேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. 
 
பணிய நியமனம் பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மாநில அளவிலான நியமன தேர்வு நடைபெற வேண்டும் என்றும், மாநில மொழி அறிவு கொண்டவர்கள் பணி நியமனங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய வகையில் கல்வித் தகுதி உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது மத்திய ஊழியர் தேர்வாணையம்  (Government of India, Ministry of Personnel, Public Grievances & Pensions, Department of Personnel and Training, Staff Selection Commission) 21.05.2026 அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கையில் உதவித் தணிக்கை அலுவலர் (மாநிலப் பதவி), உதவி கணக்கு அலுவலர் (மாநிலப் பதவி) ஆகிய பணிகளுக்கு மாநில மொழி அறிவு தேவையென்றும், அதற்கு 10 ஆம் வகுப்பு மட்டத்திலான அரசு தேர்வு ஆணையங்கள் வழங்கியுள்ள சான்றிதழ்கள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கேயே பணிய நியமனம் பெறுகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது.
 
எனது கோரிக்கை நிறைவேறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்துதான் மாநில மொழிக்கான குரல் வலுவாக எழுப்பப்பட்டது. இது குறிப்பிடத்தக்க வெற்றி. ஒன்றிய அரசின் இதர பணிகளுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்னையை தொடர்ந்து வலியுறுத்திய அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்கள், வருமான வரித்துறை ஊழியர் சங்கம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள்

Advertisement

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget