மேலும் அறிய
மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சி பூங்காவில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறையை பார்வையிட்டு சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆணையாளர் கௌரவ் குமார்
Source : whatsapp
மதுரை மாநகராட்சி அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடையின் பொருட்களை வைக்கக்கூடாது ஆணையாளர் கௌரவ் குமார், உத்தரவு.
நடைபாதைகள் ஆக்கிரமிப்பு
அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் சித்திரை வீதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து ஆணையாளர் திரு.கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.52 அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் சுகாதாரம் பணிகள் குறித்து ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நான்கு சித்திரை வீதிகளில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், சித்திரை வீதிகளில் சாலைகளில் படிந்துள்ள மணல்களை விரைந்து அகற்றுமாறு கூறினார். மீனாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள மீனாட்சி பூங்காவில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறையை பார்வையிட்டு சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மழைநீரினை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டு நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை கடைக்கு உட்புறம் வைத்து வியாபாரம் செய்யுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பல்லடுககு வாகனம் அருகில் உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் தெரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்றுமாறு கூறினார். மீனாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள பல்லடுக்கு வாகன காப்பக பகுதியில் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து சித்திரை வீதி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனத்தின் கட்டிட வரைபட அனுமதி மற்றும் அளவீடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மஸ்தான்பட்டி பகுதியில் புதிதாக கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் திரு.ராஜாராம், தலைமை பொறியாளர் திரு.பாபு, மாநகர் நல அலுவலர் மரு.அர்விந்த் ஜோதி, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்து, திரு.ஆரோக்கியசேவியர், உதவிபொறியாளர் திரு.மகுடபதி, சுகாதார அலுவலர் திரு.திருமால், சுகாதார ஆய்வாளர் திரு.ரமேஷ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















