மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணி கழிப்பறை கட்டணக் கொள்ளை: எம்எல்ஏ மாறுவேடத்தில் அதிரடி ஆய்வு!

கழிப்பறைக்கு என்ன ஆஃபரா தர்றங்க மதுரைகாரங்கனா 2 ருபாய் ராம்நாட்டுகாரங்கனா 5 ரூபாயா? கூடுதல் கட்டணம் வசூல் குறித்து கேள்வி எழுப்பிய எம்எல்ஏ.

மதுரை மாட்டுத்தாவணி கட்டண கழிப்பறைகளில் கட்டண கொள்ளை புகார் நள்ளிரவில் மாஸ்க் அணிந்து டி சர்டுடன் நேரில் ஆய்வு மேற்கொண்ட  தவெக எம்.எல்.ஏ.,

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்துநிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்திருந்தனர். இதனையறிந்த மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  முக கவசம் அணிந்தபடி பொதுமக்கள் போல ஆய்வுக்கு சென்றபோது பணம் செலுத்தி கழிவறைக்குள் சென்றார்.

கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை

அப்போது எம்எல்ஏவிடமே இரண்டு ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தனர். மேலும் கட்டண கழிப்பறைகளில் முழுவதிலும் முறையாக பராமரிக்காமல் தூய்மைற்ற நிலையில் இருந்ததால் ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளரை நேரில் அழைத்த எம்.எல்.ஏ கல்லணை உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதோடு, கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மதுரகாரங்கனா 2 ரூபாய் ராம்நாட்காரங்கனா 5 ரூபாய் வாங்குவங்களா

முகக்கவசம் அணிந்து வந்த நிலையில் எம்எல்ஏ என்று தெரியாமல்  ஒவ்வொரு கட்டண கழிப்பறைகளிலும் எம்எல்ஏவிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். இதனை பார்த்த எம்எல்ஏ கல்லாணை தொடர்ந்து பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறைகேடு எனவும் உரிய பராமரிப்பின்றி இருப்பதாகவும் விதிகளை மீறினால் மாநகராட்சி ஆணையாளர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து கழிப்பறைக்கு ஆய்வுக்கு சென்றபோது எம்எல்ஏ வருவதை அறிந்து 2 ரூபாய் கட்டணம் பெற்ற நிலையில் ஏற்கனவே கழிவறைக்கு சென்றுவிட்ட நபரிடம் விசாரித்தபோது 5 ரூபாய் வாங்கியதாக தெரிவித்தார். அப்போது அங்குள்ள பணியாளரை பார்த்து பேசிய எம்எல்ஏ இதென்ன கழிவறையில் ஆஃப்ரா தர்றங்க மதுரகாரங்கனா 2 ரூபாய் ராம்நாட்காரங்கனா 5 ரூபாய் வாங்குவங்களா என கலாய்த்து எச்சரித்தார்.

கழிப்பறை ஒன்றில் பணியாளர் மதுபோதையில் பணி

இதேபோன்று மற்றொரு கழிப்பறை ஒன்றில் பணியாளர் மதுபோதையில் இருந்ததை பார்த்த எம்எல்ஏ பணியின்போது மது அருநதக்கூடாது. அது, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரை ஆம்னி பேருந்து நிலையத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கல்லணை இலவச கழிப்பறை பகுதிக்கு சென்று தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ச்சியாக ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் புகார் தொடர்பாக நள்ளிரவில் தவெக எம் எல் ஏ ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  எளிமையான முறையில் சட்டமன்ற உறுப்பினர் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget