மேலும் அறிய
Advertisement
ரயில்வே அறிவிப்பு : ஆடி அமாவாசை தர்ப்பணம்.. மதுரை - காசி உலா ரயிலில் பயணிக்க எப்படி பதிவுசெய்வது?
பயணச்சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்ய மதுரையில் இருந்து ஜூலை 23 அன்று காசிக்கு ஒரு சுற்றுலா ரயில் "உலா ரயில்" என்ற பெயரில் இயக்கப்பட இருக்கிறது. இந்த 12 நாட்கள் சுற்றுலா ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக இயக்கப்பட இருக்கிறது.
ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க மதுரை - காசி உலா ரயில் !
— Arunchinna (@iamarunchinna) July 6, 2022
ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்ய மதுரையில் இருந்து ஜூலை 23 அன்று காசிக்கு ஒரு சுற்றுலா ரயில் "உலா ரயில்" என்ற பெயரில் இயக்கப்பட இருக்கிறது.- @abpnadu
| @drmmadurai @GMSRailway@SRajaJourno @TrainUsers
இந்த சுற்றுலாவில் ஏழு சக்தி பீடங்களான ஆந்திர மாநில பீதாம்புரம் புருகுதிகா தேவி, பூரி பிமலாதேவி, ஜஜ்பூர் பிரஜா தேவி, கல்கத்தா காளி, கயா மங்கள கௌரி, காசி விசாலாட்சி, பிரயாக்ராஜ் அலோப் தேவி ஆகியோரை தரிசித்து பாதகயா, நாபிகயா, ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, பூரி ஜெகநாதர் கோவில் மற்றும் கொனார்க் சூரிய கோவில், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம், காசி கங்கையில் புனித நீராடி ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அன்னபூரணி தரிசனம் இறுதியாக நாகபஞ்சமி தினத்தன்று விஜயவாடா கிருஷ்ணா நதியில் நீராடி கனகதுர்கா தரிசனத்துடன் சுற்றுலா நிறைவு பெறும்.
இந்த சுற்றுலா ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சமையல் பெட்டிகள் இரண்டு சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப நபர் ஒருவருக்கு மூன்று வகை கட்டணங்கள் முறையே ரூ. 21,500/-, ரூ. 23600/- ரூ. 31400/- வசூலிக்கப்படும். சுற்றுலா பயணிகள் இந்த கட்டண வகைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பயணச்சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆகஸ்ட் 23 அன்று மதுரையில் இருந்து ஷீரடி, சனி சிக்னாபூர், த்ரயம்பகேஷ்வர், பஞ்சவடி, பண்டரிபூர், மந்திராலயம் ஆகிய ஆன்மீக தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா உலா ரயில் இயக்கப்பட இருக்கிறது. செப்டம்பர் 2 அன்று மதுரையிலிருந்து கோவா, மும்பை, அமிர்தசரஸ் பொற்கோயில், ஜெய்ப்பூர், அஜ்மீர் ஆகிய சுற்றுலா தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா ரயிலும் இயக்கப்பட இருக்கிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion