மேலும் அறிய

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரm கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியில் கல்லால் தாக்கி பெண் படுகொலை. நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்த காயத்ரி (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் கார்த்திகேயன் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவரை பிரிந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் வந்த காயத்ரி அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை விசாரணை.. பொதுக்குழு நடைபெறுமா..?

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகேயன், தனது குழந்தைகளுடன் 2 நாட்களுக்கு முன்பு சாலைபுதூர் வந்தார். பின்னர் அவர்கள், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென காயத்ரியை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட கார்த்திகேயன் அப்பகுதியில் தேடி பார்த்தார். அப்போது சாலைபுதூரில் உள்ள மேம்பாலம் அருகே காயத்ரி வேறு ஒரு இளைஞருடன் பேசி கொண்டிருந்தார். இதனால் கார்த்திகேயன், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து கார்த்திகேயன் பாலம் அருகே சென்றபோது காயத்ரி உடன் பேசிக்கொண்டிருந்த நபர் ஓடியுள்ளார்.

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

இதுதொடர்பாக காயத்ரியிடம் கார்த்திகேயன் கேட்டுள்ளார். அப்போது கார்த்திகேயனுக்கும், காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், அங்கு கிடந்த கல்லால் காயத்ரியின் தலையில் தாக்கியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனையடுத்து கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தலையில் படுகாயம் அடைந்த காயத்ரி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, கணவர் கொலை செய்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget