மேலும் அறிய

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய  திருமலை மெச்சினார் என்ற சிறப்பு  பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு !

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய "திருமலை மெச்சினார்" என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது.

வலையங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் என்பவர் எங்கள் ஊரில் பழமையான கல்வெட்டு இருப்பதாக  கொடுத்த தகவலின்படி, மதுரை  தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜித்குமார்,  தினேஷ்குமார்,  சூரிய பிரகாஷ் , தர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர்  ஆய்வு மேற்கொண்ட போது கண்மாய் கரை அருகில் விநாயகர் கோவில் முன்பு திருமலை மெச்சினார் என்ற பெயர் பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்த போது  312 ஆண்டுக்கு  முன்பு  வெட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய  திருமலை மெச்சினார் என்ற சிறப்பு  பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது..,” தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் என பெயர் பெற்றது. குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளது.
 
மதுரை நாயக்கர் ஆட்சி காலம்
 
மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினார்கள். திருமலை நாயக்கர் ஆட்சி காலம் பொற்காலம்.  இவர் திருவிழா மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் 98 நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம்.

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய  திருமலை மெச்சினார் என்ற சிறப்பு  பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
குன்றத்தூரில் திருமலை மெச்சினார் பட்டம் 
 
வலையங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோவில் ராஜ வீதியில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினார். திருமலை நாயக்கர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்த போது நாடகத்தை பார்த்து மெச்சிப்போனார். நாடகக்குவினரை அழைத்து பாராட்டி திருமலை மெச்சினார் என்ற சிறப்பு 
பட்டமாக  தன் கையால் செம்பு பட்டயம் , 64 உப்பில்லா கட்டிகள் வழங்கினார். மேலும் குதிரை தன் ஆட்சி பகுதி எல்லையில் ஓடி விட்டு அக்குதிரை நிற்குமிடம்  வரை நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு நாடக குழுவினருக்கு தரும்படி கட்டளையிட்டார். அக்குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரை குத்தி என்று அழைக்கப்படுகிறது.

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய  திருமலை மெச்சினார் என்ற சிறப்பு  பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
 
கல்வெட்டு செய்தி:-
 
வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தின் அடியில் 3 அடி நீளம் 2 அடி அகலம் 10 வரிகள் கொண்ட  தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது கண்டறிந்தோம். இக்கல்வெட்டு படி எடுத்து ஆய்வு செய்தோம். இக்கல்வெட்டில் சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15 திங்கட்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடகக்கலை சங்கமறிய விநாயகர் கோவிலுக்கு திருப்பணி செய்து கட்டிக் கும்பாபிஷேகம் செய்தது. திருமலை மெச்சன் உபயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம் வலையங்குளம் விநாயகர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததை  அறியமுடிகிறது.தற்போது வரை வலையங்குளத்தில் மட்டுமல்ல சுற்றி இருக்கின்ற கிராமத்தில் நடக்கும் விசேஷங்களில்  திருமலை மெச்சினார் வம்சத்திற்கு  தனி மரியாதை உண்டு.  தொடர்ந்து தொன்று  தொட்டு ஐந்தாவது தலைமுறையாக வலையங்குளத்தில் முதல் நாள் நாடகம் திருமலை மெச்சினார் நாடகக் குழுவினர் தான் அரங்கேற்றி வருகின்றனர்.தற்போது தான்  428 வது நாடகம்  நடைபெற்றது .தமிழகத்தில் அதிகமான நாட்களில்  நாடகம் நடக்கும் இடம் தான் வலையங்குளம் என்பது மற்றொரு சிறப்பு என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Embed widget