+2 தேர்வில் தோல்வி; மாணவர் விஷமருந்தி தற்கொலை - உசிலம்பட்டியில் சோகம்
உசிலம்பட்டி அருகே +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மாநிலம் முழுவதும் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் வெளியிட்டார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.
இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. இதன்படி, நேற்று (ஜூன் 20ஆம் தேதி) காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Plus2 தேர்வில் தவறிய மாணவர், மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மனவருத்தம் வேண்டாம். உலகம் மிகப்பெரியது. உங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடுங்கள். உலகம் உங்களை திரும்பிப் பார்க்கும். pic.twitter.com/mU5rFldzfz
— Dr. R. Stalin IPS (@stalin_ips) June 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்