மேலும் அறிய
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு இனி மும்பை செல்ல வேண்டாம்- மதுரையில் திருநம்பிகளாக மாறிய இளம் பெண்கள்
தென் தமிழகத்தில் முதன்முறையாக இரு இளம்பெண்களுக்கு திருநம்பிக்கான அறுவைசிகிச்சை செய்து மதுரை அரசு ராசாசி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது

ராஜாஜி அரசு மருத்துவமனை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வார்டில் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 2 பட்டதாரி இளம்பெண்கள் தோற்றத்தில் திருநம்பிகளாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அறுவை சிகிச்சை முடிவடைந்து தற்போது இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனர் என மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரத்னவேல் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே நிலையில் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள திருநம்பி - திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவில் வரும் நாட்களில் வியாழன் தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் எனவும்,

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
இந்த பிரிவில் தற்போது 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர் எனவும் பத்து பேர் மூன்றாம் பாலின அறுவைசிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு சிகிச்சை பிரிவில் செயற்கை மார்பகம், உறுப்பு பொறுத்துதல், குரல்மாற்றம், லேசர் மூலம் முடி நீக்கம் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் ரத்னவேல், திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்ட அகச்சுரப்பியல் துறை தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவகுழுவினருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

”வெளித்தோற்றத்தில் 10 வருடங்களுக்கு மேலாக திருநம்பியாக (Trans male) வாழ்ந்து வரும் 24 வயது எம்.காம் பட்டதாரி, மற்றும் 21 வயது பி.காம் பட்டதாரிகளான, இருவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உளவியல் ஆலோசனையுடன் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர். அரசு மருத்துவ குழுவினரால் பெண்ணில் இருந்து ஆணாக மாற விரும்பும் பாலின மாற்று அறுவைச்சிகிச்சையான கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை நீக்குதல் (Hysterectomy and Salpingo Oophorectomy) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. திருநம்பி மற்றும் திருநங்கைகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு ஒட்டுறுப்பு அறுவைச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது" என மருத்துவ நிர்வாக்கத்தினர் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்க -காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்போகும் மதுரை - முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்...!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விளையாட்டு
Advertisement
Advertisement