பட்டாசு ஆலைகளை கண்காணிக்கை ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கு - தொழிலாலர் நலத்துறை செயலாளர் பதில் தர உத்தரவு
2012 முதல் கடந்த டிசம்பர் வரை 9 பெரும் விபத்துக்கள் நடைபெற்றதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர் என மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
IAS அதிகாரி தலைமையில் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க கோரிய வழக்கு - தொழிலகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
விருதுநகர் மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டத்தில் 1500 பட்டாசு ஆலைகளுக்கும் அதிகமான அளவில் உள்ளன. பெருமளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் இந்த பட்டாசு ஆலைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
பட்டாசு ஆலையில் பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. 2012 முதல் கடந்த டிசம்பர் வரை 9 பெரும் விபத்துக்கள் நடைபெற்றதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். விதிகள் முறையாக பின்பற்றப்படாததால், அப்பாவி தொழிலாளர்களே தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆகவே IAS அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு குறித்து தொழிலகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலர், ஆணையர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.