மேலும் அறிய

ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம்? - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்கலாமே -  நீதிபதி கேள்வி நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட கோரி வழக்கு.
 
தூத்துக்குடி சேர்ந்த காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 125.04 ஏக்கர் பரப்பளவில், பல கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இங்கு கிடைக்கப்பட்ட  பொருட்கள் கிமு 1052 முதல் 665 ஆண்டுகள் வரை பழமையானது என கண்டறியப்பட்டது. தமிழர்களின் நாகரீகத்தை பறைசாற்றும் இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அதே பகுதியில் நிரந்தரமான அருங்காட்சியும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் எழுந்த நிலையில், பி பிரிவில் ஆதிச்சநல்லூரில் தற்காலிக  அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. 2023  டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தால் இந்த அருங்காட்சியகம் பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சி பிரிவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள அகழாய்வு அருங்காட்சியகத்தை புனரமைத்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
பாதிப்பு இல்லை
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி பிரிவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. நிலம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசு நிலம் வழங்கினால் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் தற்காலிக அருங்காட்சியகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
 
நீதிபதி உத்தவு
 
அப்போது நீதிபதிகள், ”ஐந்தயிரம் ஆண்டுகள் பழமையான, பண்டைய தமிழர்களின் நவீன நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி  நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பதற்கு  பொதுமக்களிடமிருந்து நிலம் கையாகப்படுத்துவது ஏன்?. அரசுக்கு சொந்தமான  ஏராளமான நிலங்கள் உள்ளது.  எனவே தமிழக அரசே அதே பகுதியில்  நிலங்கள் இருந்தால் வழங்கலாமே, என கேள்வி எழுப்பினார்கள். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் நிலங்கள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்.
 
வழக்கு ஒத்திவைப்பு
 
ஒன்றிய அரசு தரப்பில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மேலும் தொடர்வது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மேலும் தற்காலிக அருங்காட்சியகம் சேதம் அடைந்திருந்தால் அதை புனரமைப்பது  குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 27 க்கு ஒத்தி வைத்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget