மேலும் அறிய
Advertisement
வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்: காவல் ஆய்வாளர் சாட்சியை மிரட்டுவதாக விவசாயின் மகள் புகார்
வழக்கு குறித்த விசாரணைக்கு இறந்தவரின் சகோதரர் சேகர் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை - தமிழக அரசு தரப்பு வாதம்.
குமுளி காவல் ஆய்வாளர் சாட்சியை மிரட்டுவதால் அவரிடம் விளக்கம் அளிக்க விரும்பவில்லை எனவும் காவல் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதம்.
இறந்தவரின் சகோதரர் சேகர் நாளை காலை 10 மணிக்கு தேனி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த வினோதினி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது தந்தையான ஈஸ்வரன் விவசாய கூலி வேலை செய்பவர். கம்பம் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தோட்டத்தில் கடந்த 5 வருடமாக தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வனக்காவலராக பணிபுரியும் திருமுருகன் மற்றும் பிச்சை ஆகியோர் எனது அப்பா ஈஸ்வரனை அடிக்கடி வனப்பகுதிக்கு மரக்கன்று நடுவதற்கும் மற்றும் இதர வேலைக்கும் அழைத்து செல்வார்கள். மேலும் திருமுருகன் மற்றும் பிச்சை மூலமாக வனச்சரகர் முரளிதரன், பீட் காப்பாளர் ஜார்ஜ் என்ற பென்னிக்குட்டி, வன காப்பாளர் பிரபு, மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களான கமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோரும் எனது அப்பாவுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தனர்.
மேற்படி வனக்காவலர்களுக்கும், வன அலுவலர்களுக்கும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கும், உணவு மற்றும் அன்றாட தேவைக்கான இதர பொருட்கள் வாங்கி வருவதற்கு உதவியாக எனது அப்பா இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனக்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மது அருந்திக் கொண்டிருந்த தனது அப்பாவிடம் உல்லாசமாக இருப்பதற்கு பெண்களை அழைத்து வா என்று தகாதமுறையில் பேசியதால் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஈஸ்வரன் வனத்துறையினரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் வனக்காவலர் திருமுருகன் மற்றும் வன அலுவலர்கள் எனது அப்பாவை நேரில் வந்து வேலை செய்ய வருமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஈஸ்வரனுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 28ம் தேதி முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வனக்காவலர் திருமுருகன் மற்றும் அவருடன் பணிபுரியும் பிச்சை, முரளிதரன், ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி, பிரபு, சுமன், ஈஸ்வரன், கார்த்திக், சந்தனகுமார் ஆகியோர்கள் கூட்டாக சேர்ந்து தோட்டத்தில் வழக்கம் போல தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஈஸ்வரனை மிரட்டி வனப்பகுதிக்குள் அடித்து இழுத்து சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டார்கள்.
மேலும் வனத்துறையினரை தாக்கியதாகவும், தற்காப்புக்காக சுட்டதாகவும், பொய்யாக தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தனது தந்தைக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்து உள்ளது. வனக்காவலர்கள் சதித்திட்டம் தீட்டி கொலை செய்துள்ளனர். திட்டமிட்டு எனது தந்தை ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த வனக்காவலர்கள், வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கு குறித்து விசாரணைக்கு இறந்தவரின் சகோதரர் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மனு தாரர் தரப்பு, குமுளி காவல் ஆய்வாளர் சாட்சியை மிரட்டி அவர் சொல்லும் வாக்குமூலத்தில் கையெழுத்திட சொல்லி மிரட்டுவதாகவும், அதனால் அவரிடம் விளக்கம் அளிக்க விரும்பவில்லை எனவும் , காவல் உயர் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிட்டனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேனியில் வனத்துறை துப்பாக்கி சூட்டில் பலியான முதியவர் ஈஸ்வரன் உடன் பிறந்த சகோதரர் சேகர் இன்று 24.11.2023 காலை 10 மணிக்கு தேனி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி , வழக்கு விசாரணையை நவம்பர் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion